இலைகள் உதிரும் கிளைகள் ஓடியும் வேர்கள் விழாமல் காப்பாற்றும்

தாயக விடியலுக்காக இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கம் !

Home மறவர்கள் வீரவணக்க நாள் தியாகி பொன். சிவகுமாரன்.!

தியாகி பொன். சிவகுமாரன்.!

தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை 05.06.1974 அன்று சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தருணத்தில் சயனைட் அருந்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட “முதற் தற்கொடையாளர்” தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 45 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தமிழீன ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்டு கல்வி தரப்படுத்தலை வீசியபொழுது அதை எதிர்த்து தமிழினப் புரட்சிக்கு வித்திட்ட மாவீரம்……

தியாகி பொன் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் ஆண்டு தோறும் ஆனி (ஜூன்) மாதம் 6ம் நாள் தமிழீழம் எங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழீழ ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்ட கல்வித் தரைப்படுத்தலை தமிழ் மாணவர்கள் மீது திணித்த போது ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் நஞ்சு (சயனைட்) அருந்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் பொன். சிவகுமாரனை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் மாணவர் எழுச்சி நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

முதல் தற்கொடையாளன் தியாகி பொன். சிவகுமாரனின் நினைவு நாளாகிய ஆனி (ஜூன்) 5 இல் உலக சூழல் நாள் வருவதால் அதற்கு மதிப்பளித்து ஆனி (ஜூன்) 6ம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது.


* எமது விடுதலைப் போராட்டத்துக்கு கல்விக்கு கவசமாக இருப்பது போல, கல்வியும் எமது போராட்டத்திற்கு காப்பரணாக நிற்க வேண்டும்.

* எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக தேசப்பற்றாளர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும்.

  – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

தியாகி பொன். சிவகுமாரன் சாதிக்க முயற்சித்தவற்றை தமிழீழத் தேசியத்தலைவரும் அவர்தம் தோழர்களும் சாதித்தனர். இன்று அவனின் கனவான தமிழீழத் தாயகத்தை நோக்கி தமிழீழத் தேசியம் வீறுநடைபோடுகின்றது.

இன்று மாணவர் சமூகம் பொங்குதமிழாய் உலகப் பரப்பெங்கும் பொங்கியெழுந்து தமிழீழத் தேசியத் தலைமையை வலுச்சேர்த்து நிற்கின்ற காலகட்டமிது. கடல்கடந்து வாழுகின்ற தமிழீழ மாணவர் சமூகத்தின் ஆதரவு தாயக நிர்மாணிப்பிற்கு இன்று பெருமளவு தேவையாக உள்ளது. காலம் இட்ட கட்டளையை நிறைவேற்ற வரலாறாகிப் போன மாணவப் போராளியின் நினைவுமீட்புநாளில் தாயகத்திற்கு வளம் சேர்க்க இளையதலைமுறையினர் அனைவரும் உறுதியெடுத்து, புலத்திலிருந்து நிலத்திற்கு வந்து செயற்பட வேண்டிய தருணமிது.

 

 

 

 

 

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

05.07.1993 அன்று கரும்புலிகள் தினத்தை ஆரம்பித்து வைத்து தமிழீழ தேசியத் தலைவர் திரு வே பிரபாகரன் அவர்கள் விடுத்த அறிக்கை.!

05.07.1993 அன்று கரும்புலிகள் தினத்தை ஆரம்பித்து வைத்து தமிழீழ தேசியத் தலைவர் திரு வே பிரபாகரன் அவர்கள் விடுத்த அறிக்கை.! எனது அன்புகுரியவர்களே ! கரும்புலிகள் நாளாகிய இன்றைய தினத்தில் கரும்புலி வீரர்களாகிய உங்கள் மத்தியில்...

கரும்புலிகள் நாள் -2020

அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறீலங்காப்படையினர்...

கரும்புலி கப்டன் மில்லர்

கரும்புலி கப்டன் மில்லர் வல்லிபுரம் வசந்தன் துன்னாலை தெற்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு:01.01.1966 வீரச்சாவு:05.07.1987 நிகழ்வு:யாழ்ப்பாணம் யாழ். மாவட்டம் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயதில் அமைந்திருந்த சிறிலங்கா படை முகாம்மீது வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி மோதி வெடிக்க வைத்து வீரச்சாவு முதலாவது கரும்புலி...

“சாகரவர்த்தனா” போர்க்கப்பலில் கைப்பற்றபப்ட்ட ஆயுதங்கள் பார்வை

“சாகரவர்த்தனா” போர்க்கப்பலில் கைப்பற்றபப்ட்ட ஆயுதங்களைப் பார்வையிடும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்

Recent Comments