மேஜர் இன்பநிலா குறிப்பேட்டிலிருந்து…………!

0

‘இது எங்கள் மண் பரிசுத்தமானது,

இதிலே பிறந்தேன் இதிலே கிடந்தேன்,

இதிலே வளர்ந்தேன் இதிலே இறப்பேன்,

மானத்தை விற்காமல் மரியாதை இல்லாமல்

மானம் சொர்க்கம், அதை இழப்பது நரகம்.

மலர் மண்ணிலிருந்து தன் இச்சைப்படி முளைக்கிறது,

சுதந்திரமே ஒரு மலர்

அது பஞ்சனையில் முளைப்பதும் இல்லை,

மலர்வதும் இல்லை….

மாவீரர்களின் மனதிலிருந்து,

அவர்களின் தியாகத்தால் மலர்கின்றது,

மண் பஞ்சணை மானம் இலட்சியம்’

‘வேவின் விரிவும் செய்திறனுமே

இலக்கின் வெற்றி’

‘நீண்ட கடலும் நீண்ட வானும்

நெடிய மூச்சுடன் கரையை தொட்டெழும்……. அலையும்

என்னைப் பார் என எழுந்து நிற்கும் பனையும்

காற்றோடு கலந்து விட்ட காவலரின் கதை கூறும்.

விண் முட்டி கட்டிடமும் வீராப்பாய் சிலிர்த்து நிற்கும்

என் தேசத்தின் சேதியினை இனிதே பரவவிடும் காற்றலையும்

இளையவரின் இலட்சியத்தை இதமாய் எடுத்துரைக்கும்.

தரைத்தளமும் கடற்கலமும் வான்கலமும்

வெடிப்பதிர்வு வேகத்தில் சிதைந்து விட்ட

சேதியினை விரைவாக வியந்துரைக்கும்

அதிகாலை நிசப்தமும் அந்திவானச் செழுமையும்.

விடியலின் புலர்வை விரைவாக ஏற்றி நிற்பேன்

வான்கலமானால் எழுப்பி உதைத்திடுவேன்

தரைத்தளமானால் வேவு பார்த்தழித்திடுவேன்

கடற்கலமானால் கரும்புலியாய் தகர்த்திடுவேன்’.

கடற்புலி மேஜர் இன்பநிலா

மயில்வாகனம் கன்னிகராணி

17.07.1974 – 11.01.2000

மருதங்கேணி, வடமராட்சி கிழக்கு.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.