உயிரிலும் மேலான தாயகத்தை மீட்க உறுதி கொள்வோம்.!

0
உயிரிலும் மேலான தாயகத்தை மீட்க உறுதி கொள்வோம்.!
13.09.2000 அன்று 10 மணிக்கு புதுக்குடியிருப்பில் நடைபெற்ற போரெழுச்சி உலா நிகழ்வின்போது தமிழீழத் தேசியக் கொடியை ஏற்றிவைத்த தமிழீழ
அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆற்றிய உரையை  காலத்தின் தேவை கருதி வேர்கள் இணையம்  வெளியீடு செய்கின்றது
எமது தேசியத் தலைவர் அவர்களின் உயரிய சிந்தனைகளுக்கும், எமது தேசத்தை விரைவாக வென்றெடுக்க வேண்டும் என்ற ஆவலின் அயராத முயற்சிக்கு மக்கள் அனைவரும்  முழுமையான செயல்வடிவம் கொடுக்க  கிளர்ந்தெழுந்து அணி திரள வேண்டும்.
கடந்த ஆண்டு எமது தலைவர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மக்களாகிய  நீங்கள் போரெழுச்சி அணிகளாகவும், எல்லைப் படைகளாகவும், கடந்த போரெழுச்சி ஆண்டில் நீ நீங்கள வழங்கிய பரிபூரணமான ஒத்துழைப்பினால் நாங்கள் ஓயாத அலைகள் – 3 இல் உலகம் வியக்கும் பல வெற்றிகளைப் பெற்று இன்று வன்னிப் பெரு  நிலப்பரப்பின் பெரும் பகுதிகளை மீட்டெடுத்ததுடன், மணலாற்றில் குறிப்பிட்ட  பிரதேசத்தையும், ஆனையிறவு போன்றபன்னெடுங்காலமாக பகைவன் தமிழீழத்தின் பிரதான  பகுதிகளையும் குறைந்தளவு இழப்புக்களுடன் வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளோம். அதேவேளை சிங்கள அரசுகளின் பல்வேறுபட்ட நடவடிக்கைகளால் எமது மக்களாகிய நீங்கள் படும் அவலங்களுக்கும் வேதனைகளுக்கும்
முடிவுகட்ட விரைவான விடைகாண அனைவரும்  அணிதிரண்டு எம் விடுதலைப்போரை வென்றெடுக்க உறுதி எடுத்துக் கொள்வோம் இதுவரை காலமும் நீங்கள் எமக்கு வழங்கிய ஒததுழைப்புக்கள் மென்மேலும்அதிகரிக்க வேண்டும். தளராத உறுதியுடன் விடுதலைகாணக் கிளர்ந்தெழுவோம். விடுதலைப்போர் பல வெற்றிகளைப் பெற்றுவரும் இந்தக் காலகட்டத்தில் மக்களாகிய நாம் அனைவரும் போர்ப் பயிற்சிகளைப் பெற்று சகல வழிகளிலும் போர்ப்பணிகளில் பங்கெடுத்து விடுதலைக்கு விரைந்து உழைக்க திடசங்கற்பம் பூணவேண்டும்.
-சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள்
தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர்
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.