ஆழிப்பேரலை புதிய பாதைகளைப் புலிகளுக்குத் திறந்துவிட்டிருக்கிறது

- சர்வேதேச கடிதம் எனும் பத்திரிக்கையிலிருந்து (பிரான்ஸ் நாளிதழ் )

0
ஆழிப்பேரலை புதிய பாதைகளைப் புலிகளுக்குத் திறந்துவிட்டிருக்கிறது என Marie-France Cale என்று அழைக்கப்படும் பத்திரிகையாளர் கூறுகிறார் இலங்கைத் தீவில் கடல்கோளால் பாதிக்கப்பட்ட  பகுதிகளை நேரில் சென்று பாத்த பின் அவர் எழுதிய நீண்ட கட்டுரையின் ஒரு பகுதியின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம். 
கிளிநொச்சிநகரம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது
‘பொறுத்தல்’ என்கின்ற சொல் தமிழீழ விடுதலைப் புலிகளின் அகராதியில் ஒருபொழுதும் இருந்ததில்லை
புலிகள் இலங்கையின் வடக்கு, கிழக்கின் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மக்கள் மத்தியில் ஒழுங்குமுறைகள் பேணப்படுவதில் மிகுந்த அக்கறையோடு செயற்பட்டு வருகிறார்கள் .
ஒழுங்குமுறைகள் பாரதூரமாக மீறுப்படுமிடத்து புலிகள் அவர்களை நீதியின் முன் நிறுத்தி விசாரணை செய்வார்கள்.
தலைவர் பிரபாகரன் அவரது நாட்டு மக்களால் தந்தை என்ற ஸ்தானத்தில் வைத்து நோக்கப்படுகிறார். 
ஆழிப்பேரலை விடுதலைப் புலிகளின் அரசியல் நோக்கத்தில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை மாறாக, மனதை உருக்கும் இந்த சம்பவம் சர்வதேச ரீதியாக சட்டரீதியான பல பாதைகளை அவர்களுக்கு திறந்துவிட்டிருக்கிறது
சர்வதேச சமுதாயம் எதைக் காண்கிறது என்றால், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கிடையிலும், சிங்கள அரசாங்கத்திற்கிடையிலும் 2002 ஆம் ஆண்டு மாசி மாதம் கைச்சாத்திடப்பட்ட, இன்று அபாய நிலையிலுள்ள போர் நிறுத்த  ஒப்பந்தம் எந்நேரமும் உடைந்து விடலாம் என்பதையே.
நோர்வே சமாதானக்குழுவினர், ஆழி பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் ஒழுங்கான முறையில் அவர்களைச் சென்றடையவேண்டும் என்பதில் அக்கறை காட்டி வருகின்றனர் . 
சமாதானத்திற்கான ஒப்பந்தம் இறக்கும் தறுவாயில் இருக்கும் அதே வேளையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சர்வதேச உதவிகளும் சென்றடையவில்லை .
‘கடநத மார்கழி மாதமே எங்களுடைய பொறுமையின் எல்லையை தொட்டுவிட்டோம், ஆனால் ஆழிப்பேரலை அடுதத கட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருக்கிறது’ என்று புலிகள் அமைப்பு  கூறுகின்றார்கள் .
‘எமக்கும், சிங்கள அரசாங்கத்திற்கும் இடையே உதவிகளை பகிர்வதற்கான
ஒப்பந்தம் சரி வந்தால் அது நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு குறியீடாக இருக்கும் என்பதே சர்வதேச சமுதாயத்தின் பார்வை’ என்றார்
சிங்கள அரசு, பாதிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களுக்கு உதவிகளை வழங்கககூடாது எLபதில கடும்பிடியாக இருக்கிறது. சிங்கள அரசுககு சர்வதேச சமுதாயம் இந்த விடயத்தில் கண்டனங்களை தெரிவிப்பதோடு அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டும்.
கடல்கோளால் தமிழர் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ச்சியான போராட்டத்தால் நொந்துபோன எமது மக்களுக்கு ஆழிப்பேரலை இன்னும் ஒரு பரழிவை ஏற்படுத்தியது ‘ என அவர் மேலும் குறிப்பிட்டார் .
கிளிநொச்சியில் இருக்கும் சில உணவகங்கள் அல்லது முழுதாகக்கூட தமிழீழ விடுதலைப் புலிகளினுடைவை. அங்கே விடுதலைப் புலிகளினுடைய வானொலி ஒலிபரப்புக்களை மக்கள் செவிமடுத்தபடி இருப்பார்கள்.
-தமிழாக்கம் :மீரா 
வெளியீடு :எரிமலை இதழ் 
இணைய  வெளியீடு :வேர்கள் இணையம் 

தட்டச்சு:நிலராவணன்  (வேர்கள்  இணைய  தட்டச்சாளர் )

“புலிகளின் தாகம்  தமிழீழத் தாயகம்”

 “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.