லெப்.கேணல் கெளசல்யன் உட்பட நான்கு மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்றாகும்.!

0

07.02.2005 அன்று பொலநறுவை மாவட்டம் வெலிகந்தைப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினராலும், தேசவிரோதிகளாலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட்ட நான்கு மாவீரர்களினதும், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் அவர்களினதும் 14ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்.

 

வன்னியில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றிற்காகச் சென்று விட்டு  மட்டக்களப்பு   வரும்வேளை சிறிலங்கா படையினர் மற்றும் தேசவிரோதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் லெப்.கேணல் கௌசல்யன்  அவர்களுடன்
மேஜர் புகழன் (சிவலிங்கம் சுரேஷ்) மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமி 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன்) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இதன்போது படுகாயமடைந்த மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு அவர்கள் மருத்துவமனையில் 8.2.2005 அன்று உயிரிழந்தார்.
இவர்கள் பயணித்த ஊர்தி ஓட்டிச்சென்ற ஊர்தி ஓட்டுனர் விவேகானந்தமூர்த்தி என்பவரும் இதன்போது கொல்லப்பட்டார்.

 

தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.