மண்காத்த மாவீரர்.!

0

கண்ணிற்கு இமைபோல – எம்
மண்காத்த மாவீரர்
கரம் தனை நான் இழக்க – எனை
தோழ் சுமந்த தோழன் இவன்
மீண்டும் களமாடச் சென்றவனை
கல்லறையில் தரிசிக்கின்றேன் நண்பா
நீ இலையுதிர் காலத்து சருகாய் அல்ல உயர்
இலட்சியத்திற்காய் வீழ்ந்த வித்து
இன்றே முளைவிடு ஈழ மண்ணிற்காய்

 

தாய் மடியில் தவழ்ந்தவன் – தமிழ்
தாய் மடியில் துயில்கின்றான் – அன்னை
அள்ளி வைக்கும் மலர்க்கொத்தில்
அவன் வதனம் காணுகின்றாள்
தாய் அணைப்பு புரிந்து உள்ளே
தனயன் முகம் மலர்ந்திடுவான்

கவியாக்கம் – பே.சுகந்தன்

நவம்பர் 2005 எரிமலை இதழ் 

மாவீரர் நாள்  சிறப்பு  பதிவிலிருந்து வேர்கள்.!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.