தளபதி மேஜர் கணேஸ், கரும்புலி மேஜர் அருளன், கரும்புலி மேஜர் சசி வீரவணக்க நாள் இன்றாகும்.!

0

திருமலை மாவட்டத்திலுள்ள பெரியபாலம் என்ற இடத்தில் 05.11.1986 அன்று நிகழ்ந்த இராணுவத்தின் சுற்றிவளைப்பி்ல் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிய தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், மூதூர் பகுதித் தலபதியுமான மேஜர் கணேஸ் ஆகிய மாவீரரின் 32ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

“ஓயாத அலைகள் 03” படை நடவடிக்கையில் மணலாற்றில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தின் பராக்கிரமபுர படைத் தளத்தினைத் தாக்கியழிப்பதற்காக நகர்ந்து கொண்டிருந்தவேளை 05.11.1999 அன்று நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் அருளன், கரும்புலி மேஜர் சசி ஆகிய கரும்புலி மாவீரர்களின் 19ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

 

 

 

 நீளும் நினைவுகள் .!

மௌனக் குமுறல் .!

ஒரு மலையின் சரிவு!

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.