தமிழீழ விடுதலைக்கு விதையான தமிழகத்தை சேர்ந்த மாவீரர்கள் .!

தமிழீழ விடுதலை போராட்டத்தில் 40 ஆயிரம் வரையிலான மாவீரர்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கின்­றார்கள் .இந்த விடுதலை போராட்டத்தில் தமிழக மக்களின் பங்களிப்புக்கள் மறக்கமுடியாதவை .ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் விடுதலைப் புலிகளைப் பாதுகாப்பதற்காவும் எத்தனையோ தமிழக உறவுகள் தங்கள் அற்புதமான உயிர்களை அர்ப்பணித்திருக்கின்றார்கள் இந்த வரிசையில்     அப்துல் ரவூப் ,  முத்துக்குமார் என 20 க்கும் மேற்பட்டவர்கள் தங்களை தீக்கிரையாக்கி தமிழர்களின் உரிமைக்காக உயிர்விட்டுருக்கும் அதேவேளையில் களத்தில் ஆயுதம் தாங்கிப் போராடியும் தமிழக இளையோர் யுவதிகள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்திருக்கின்­றார்கள் .இறுதிவரையிலான போரில் எத்தனை தமிழக மாவீர்கள் விதையானார்கள் என்பது உறுதியாக தெரியவில்லை எனினும் ஒரு கரும்புலி. இரு பெண் மாவீர்கள் உற்பட 14 தமிழக மாவீர்களின் விவரங்கள் வேர்கள் இணையத்திற்கு கிடைத்துள்ளன அவற்றை இங்கே தருகின்றோம்

பிரிவு: கரும்புலி
நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்:செங்கண்ணன்
இயற்பெயர்: தனுஸ்கோடி செந்தூர்
ஊர்: சாத்தூர், சிவகாசி(தமிழகம்)
வீரப்பிறப்பு: 25.01.1975
வீரச்சாவு: 11.11.1993
நிகழ்வு: யாழ்ப்பாணம் பலாலி படைத்தளத்தினுள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: உமா
இயற்பெயர்: வேலுச்சாமி இந்துமதி
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 27.05.1972
வீரச்சாவு: 11.12.1999
நிகழ்வு: கிளிநொச்சி பரந்தன் பகுதியில் “ஓயாத அலைகள் 03“ நடவடிக்கையின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: மணியரசி
இயற்பெயர்: செல்லத்துரை கமலாதேவி
ஊர்: தமிழகம்.
வீரப்பிறப்பு: 02.02.1977
வீரச்சாவு: 19.04.1996
நிகழ்வு: யாழ்ப்பாணம் தென்மராட்சி கோட்டத்தை கைப்பற்ற
மேற்கொள்ளப்பட்ட சூரியகதிர்-2
நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: பத்மநாபன்
இயற்பெயர்: பி.பத்மநாபன்
ஊர்: திருச்சி, தமிழகம்.
வீரப்பிறப்பு: 27.07.1963
வீரச்சாவு: 16.03.1988
நிகழ்வு: தமிழகத்தின் திருச்சியில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின்போது வீரச்சாவு

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுனில்
இயற்பெயர்: கதிரவன்
ஊர்: தமிழகம்.
வீரச்சாவு: 11.04.1988
நிகழ்வு: முல்லைத்தீவு ஒட்டங்குளத்தில்
இந்தியப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு

நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: இனியன்(றஸ்கின்)
இயற்பெயர்: முத்தையா இராமசாமி
ஊர்: தூத்துக்குடி, கன்னியாகுமாரி, தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 23.07.1962
வீரச்சாவு: 11.12.1991
நிகழ்வு: மன்னார் மருதமடு வேப்பங்குளம் பகுதியில்
சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு
துயிலுமில்லம்: ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: 2ம் லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: உதயசந்திரன்
இயற்பெயர்: சேதுபாணடித்தேவர்
ராமமணி சேகரன்மகாதேவர்
ஊர்: திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 05.05.1969
வீரச்சாவு: 09.06.1992
நிகழ்வு: மன்னார் சிறுநாவற்குளத்தில் சிறிலங்கா படையினர் மீதான அதிரடி தாக்குதலின் போது வீரச்சாவு

பிரிவு: கடற்புலி
நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: ஈழவேந்தன்
இயற்பெயர்: துரைராசன் குமரேசன்
ஊர்: தமிழ்நாடு.
வீரப்பிறப்பு: 25.05.1969
வீரச்சாவு: 20.11.1992
நிகழ்வு: தமிழீழக் கடற்பரப்பில் வீரச்சாவு
துயிலுமில்லம்: எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது.

நிலை: லெப்டினன்ட்
இயக்கப் பெயர்: சச்சு
இயற்பெயர்: அன்ரனி சிறிகாந்த்
ஊர்: பியர், இந்தியா.
வீரப்பிறப்பு: 04.09.1975
வீரச்சாவு: 20.12.1992
நிகழ்வு: மன்னார் நானாட்டன் மாதிரிக்கிராமம்
படை முகாம்களுக்கிடையில் அமைந்துள்ள காவலரண்கள்
மீதான தாக்குதலின்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குணதேவன்(லக்ஸ்மணன்)
இயற்பெயர்: அம்மனாரி தென்னரசு
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 01.01.1966
வீரச்சாவு: 13.05.1996
நிகழ்வு: அம்பாறை 11ம்கொலனியில் அமைந்திருந்த
காவல்துறை நிலையம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு

நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: பெரியதம்பி(விஸ்ணு)
இயற்பெயர்: சிவானந்தம் முகேஸ்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 31.05.1975
வீரச்சாவு: 19.05.1996
நிகழ்வு: திருகோணமலை கீலக்கடவெல படைமுகாம் மீதான
தாக்குதலில் வீரச்சாவு
துயிலுமில்லம்: மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: கப்டன்
இயக்கப் பெயர்: குற்றாளன்
இயற்பெயர்: கந்தையா கலைச்செல்வன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 08.08.1969
வீரச்சாவு: 16.07.1996
நிகழ்வு: மன்னார் பள்ளிமுனைப்பகுதியில்
படையினரின் சுற்றிவளைப்பின் போது சயனைட்
உட்கொண்டு வீரச்சாவு

நிலை: வீரவேங்கை
இயக்கப் பெயர்: சுதா
இயற்பெயர்: வீரப்பன் இலட்சுமணன்
ஊர்: தஞ்சாவூர், தமிழ்நாடு
வீரப்பிறப்பு: 28.10.1980
வீரச்சாவு: 05.07.1999
நிகழ்வு: மன்னார் பள்ளமடு பகுதியில்
சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடிமோதலில்
வீரச்சாவு
துயிலுமில்லம்: கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது.

நிலை: மேஜர்
இயக்கப் பெயர்: குருசங்கர்
இயற்பெயர்: பழனியாண்டி மகேந்திரன்
ஊர்: தமிழகம்
வீரப்பிறப்பு: 18.04.1973
வீரச்சாவு: 25.07.1996
நிகழ்வு: முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள்
நடவடிக்கையின்போது விழுப்புண்ணடைந்து பண்டுவம்
பெறும்போது வீரச்சாவு
துயிலுமில்லம்: பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் வித்துடல் விதைக்கப்பட்டுள்ளது

 

 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.