முள்ளிவாய்க்கால் .!

முள்ளிவாய்க்கால் நாங்கள் மூச்சடங்கி நசுங்கிப்போன கடற்கரை

மண்டியிடா எங்கள் வீரம் அறிந்த சுடுகரை

கொத்துக்குண்டுகளால் கொத்துக்கொத்தாக செத்து மடிந்த சுடுகாடு.

ஆனந்தபுரம் எங்களின் ஆயுதங்களின் அடையாளம்.

சேடம் இழுத்த சிசுவைக்கூட காப்பற்றாமல் கண்ணீரோடல்லவா கரைகடந்தோம்

வந்தாரை வாழவைத்த வன்னி மண் அன்று இருப்பாரை கூட காப்பாற்றமுடியாமல் அல்லவா தவித்தது

மாவிலாறு தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை செத்து செத்தல்லவா கரை கடந்தோம்.

உண்ணவும் வழியில்லாமல் உறங்கவும் வழியில்லாமல் குறுநிலப்பரப்பில் உழன்றடித்தோம்

பாதுகாப்பு வலையங்கள் என்றார்கள் அங்கே தான் பழிதீர்க்கப்பட்டோம்

ஐநா சபை என்றார்கள் நாங்கள் அழிந்தததை வேடிக்கைமட்டுமே பாரத்தார்கள்

காயப்பட்டவர்களுக்கு மருந்தில்லை மருத்துவமனை போனால் அங்கே தான் அதிகமாய் அடித்துக்கொன்றார்கள்

அன்றைய சிங்கள வெசாக்கூடுகள் எங்களின் உயிர்களில் அல்லவா கட்டப்பட்டது

நந்திக்கடலோரத்தில் அம்மணமாய் எம் எத்தனை அண்ணன்கள் சுடப்ப்ட்டனர் யார் அறிவார்

பிணமாகியும் புணரப்பட்ட என் அக்காள் எத்தனை பேர்

சிங்கள பிணம்புணரிகளால் சிதைக்கப்பட்ட என் குலப்பெண்கள் எத்தனை பேர்

வட்டுவாகல் வெட்டையில் சிங்கள் வஞ்சகம் பலி எடுத்த என் உறவுகளுக்கு என்ன பதில்.
இத்தனையும் எதற்காய் அத்தனையும் எம் விடுதலைக்காய் நாம் கொடுத்தவிலைகள்.

 ஆக்கம் :-  தி.த.நிலவன்

வெளியீடு :வேர்கள் இணையம் 

Leave A Reply

Your email address will not be published.