புலம் பெயர்ந்த நண்பனுக்கு.!

மயிர்க்கொட்டிகளின்
உயிரைக் கருக்கும் – மானுடம்
வண்ணத்துப் பூச்சிகளின்
அழகை ரசிக்க ஏங்குவது
வெறும் பம்மாத்து !

மரங்களில் உயிர்ப்பு இருக்கும் வரைதான்
வேர்களுக்கு மதிப்பிருக்கும்.
மரங்கள் உயிர்ப்பு இழந்தால்
வேர்கள் வெறும் விறகுதான்.

கண்கள் இரண்டு என்றாலும்
காட்சி ஒன்றாக…
செவிகள் இரண்டு என்றாலும்
செய்தி ஒன்றாக…
கைகள் இரண்டு என்றாலும்
ஆற்றும் கருமம் ஒன்றாக…
பாதம் இரண்டு என்றாலும்
பாதை ஒன்றாக…
இருக்கும் வரையில்தான்
தலைக்கு மதிப்பிருக்கும்.

குருடோ செவிடோ
அவள் என் தாய்
பாலை நிலமோ
பொட்டல் வெளியோ
பற்றைக் காடுகளோ
வரண்ட செம்மண்ணோ..
அது என் தாயகம்
அதுவே மகிமை மிக்கது.

-கவியாக்கம் :இளையவன் 

– எரிமலை (செப்டம்பர்  1995) இதழிலிருந்து வேர்கள் .!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.