தாயக நேரம்:2018-02-20 19:22:47

நினைவு

தேசிய தலைவர் சிந்தனைகள்

வரலாற்றில்

மாமனிதர் சந்திரநேரு வீரவணக்க நாள்


அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு 07.02.2005 அன்று மட்டக்களப்பு இராணுவ கட்டுபாட்டுப் பகுதியான புனானைப் பகுதியில் வைத்து லெப். கேணல் கௌசல்யன் குழுவினர் பயணித்த வாகனத்தின் மீது சிறீலங்கா இராணுவம் மற்றும் தேசவிரோதக் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து 08.02.2005 அன்று மருத்துவ மனையில் சாவைத் தழுவிய மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு அவர்களின் 13 ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.

இவர் சிங்களப் படைகள் அம்பாறை மண்ணில் புரிந்த அட்டூழியங்களை நேர்மைத்திறனுடன் உலகிற்கு வெளிக்கொணர்ந்தார். இவரின் இனப் பற்றிற்கும் விடுதலைப் பற்றிற்கும் மதிப்பளித்து, அவரது நற்பணியைப் கௌரவிக்கும் முகமாக தமிழீழத் தேசியத் தலைவர் மாமனிதர் என்ற அதியுயர் தேசிய விருதை வழங்கி கௌரவித்தார்.

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”