தமிழீழ தேசியத் தலைவர் மாணவர்களைப் பாராட்டி விடுத்த அறிக்கை .!

0

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே .பிரபாகரன்  08.04.1994 அன்று தமிழிழப்  பொதுக்கல்வித்  தேர்வில்  சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி விடுத்த அறிக்கை  காலத்தின் தேவை கருதி வேர்கள் இணையத்தில்  மீள் வெளியீடு செய்கின்றோம் .!

“எமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கும் உரிமை பெற்றவர்களாக இறைமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் ” 

மிகவும் நவீனமான தொழில்நுட்ப யுகத்தை நோக்கி இன்றைய உலகம் நகர்ந்து
கொண்டிருக்கின்றது. அறிவியலும் தொழில்நுட்பமும் அபார வளாசசி கண்டு
உலகத்தின் வளர்ச்சிப் போக்கில் புரட்சிகரமான மாற்றத்தை நிகழ்த்தி வருகின்றன.
இந்த வளர்ச்சிப் போக்கின் தாக்கத்தால் முன்னேறிய நாடுகளின் சமூக, பொருண்மிய
வாழ்வும் பிரமிக்கத்தக்க வகையில் மாற்றங்கண்டு வருகின்றது. இந்தப் புதிய யுகத்தின்
தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் அடித்தளமாக விளங்குவது அறிவியல் தொழில்நுட்பக்
கல்வியாகும்
அறிவுசார் கல்வியின் வளர்ச்சியால் மாறிவரும் உலக சமூகத்துடன் ஒப்பு நோக்
குகையில் எமது தேசத்தின் கல்வி நிலை மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கின்றது
இதற்குப் பிரதான காரணி சிங்கள இனவாத அரச ஒடுக்குமுறையாகும். இந்த
ஒடுக்குமுறை எமதுதேசத்தின் ஆற்றலையும் சக்தியையும் முடக்கிவைத்திருக்கின்றது.
எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாக விளங்கும் கல்வித்துறையைச் சிதைத்துவிடச்
சிங்களப் பேரினவாதம் நீண்ட காலமாகவே முனைந்து வருகின்றது. சிங்கள
மொழித்திணிைப்பில் தொடங்கி, தரப்படுத்தல் என்றும், வெட்டுப்புள்ளி என்றும்,
காலததறகு காலம் தமிழரின் கலவியைச் சாகுலைபபதறகுத திட்டமிட்ட முயற்சிகள்
எடுக்கப்பட்டன. இப்பொழுது, இராணுவ நடவடிக்கை என்ற போர்வையில் இந்தக்
கல்வியழிப்புக் கொள்கை மிகவும் நுட்பமான முறையில் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது. இப்படியான அரச ஒடுக்குமுறையின் நெருக்குதல்கள் காரணமாக எமது
கல்வித்துறை என்றுமில்லாதவாறு பெரும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கின்றது.
எதிரியின் பாரிய அழிப்பு வேலைகளுக்கு மத்தியில் எமது விடுதலை இயக்கமானது , தனது சக்திக்குட்பட்டதாக , சில ஆக்க வேலைகளைச் செய்து வருகிறது. பெரியதொரு போருக்கு முகங்கொடுத்தவாறு, சமூக மேம்பாட்டிற்காக உழைப்பதில் பல இடர்பாடுகள் இருக்கவே செய்யும். விடுதலை வேண்டிப் போராடும் இனங்கள் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்வது இயல்பு.
எமது தேசம் விடுதலை பெற்று, நிலையான அமைதியும், உறுதியான அரசும் தோன்றும் பொழுதுதான் நாம் எமது சமூகப் பொருண்மிய வாழ்வை உயர்ந்த படிநிலைககு கட்டி  எழுப்புவது  சாத்திய மாகும். அப்பொழுதுதான் கல்வித்துறையையும் சீரானமுறையில் சீரமைத்து, எமது நாட்டின் நலன் பேணும் வகையில் மேம்பாடு செய்ய முடியும். தேசியக் கல்வித்திட்டம் ஒன்றைச் செயற்படுத்த முடியும். அறிவியல் , தொழில்நுட்பக் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து எமது நாட்டை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்ல முடியும்.
எமது சமூகத்தின் ஒட்டுமொத்தமான வடிவவிற்கும விமோசனத்திற்கும் தேசிய விடுதலை அத்தியாவசியமானது என்பதை நான் வலியுறுத்தத் தேவையில்லை . கல்வி உட்பட சகல சமூக அமைப்புக்களையும் ஒரு உன்னதமான
வளர்ச்சிப் போக்கில் உயர்நிலைக்கு நகர்த்திச் செல்வதாயின் நாம் சுதந்திர மனிதர்களாக, எமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கும் உரிமை Lபறறவாககளாக,
இறைமை பெற்றவர்களாக இருக்க வேண்டும். இதனால்தான் தேசிய விடுதலையை எமது பிரதான இலட்சிமாக வரித்துக் கொண்டு நாம் போராடுகிறோம்.

 

இன்று நாம் ஒரு போர்ச்சூழலில் வாழ்கிறோம் இந்தப் போர்ச் சூழலில் எமது தேசிய வாழ்விற்கும் வளத்திற்கும் அடிததளமாக சமூக நிறுவனங்கள் சிதைந்து போகாமல் பாதுகாப்பது எமது முதன்மையான பணியாக இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு எமது விடுதலை இயக்கம் ஆக்கபூர்வமான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வித்துறையின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்குமாக நாம் உருப்படியான முயறசிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
– தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே .பிரபாகரன்
வெளியீடு :எரிமலை இதழ் 
மீள் வெளியீடு :வேர்கள் இணையம் 
முதல் இணைய தட்டச்சு  :வேர்கள் இணையம் 

Leave A Reply

Your email address will not be published.