கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை, கடற்கரும்புலி மேஜர் கண்ணபிரான், கடற்கரும்புலி மேஜர் பார்த்தீபன், கடற்கரும்புலி மேஜர் பதுமன், கடற்கரும்புலி மேஜர் சுடரொளி வீரவணக்க நாள் இன்றாகும்.

19.07.1996 அன்று “ஓயாத அலைகள் – 01″ நடவடிக்கையின் போது முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினரின் P 321 “ரணவிரு” பீரங்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் செல்லப்பிள்ளை, கடற்கரும்புலி மேஜர் கண்ணபிரான், கடற்கரும்புலி மேஜர் பார்த்தீபன், கடற்கரும்புலி மேஜர் பதுமன், கடற்கரும்புலி மேஜர் சுடரொளி ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

முல்லைத்தீவு இராணுவத் தளத்தில் தாக்குதலுக்குள்ளாகும் படையிருக்கு சூட்டாதரவை வழங்கிக் கொண்டு மீட்பு அணிகளை தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படை கலங்களிற்கு பாதுகாப்பை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படை பீரங்கிக் கலங்கள் மீது கடற்புலிகளால் பெரும் தாக்குதல்கள் நடாத்தப்பட்டன.

இதன்போது “ரணவிரு” பீரங்கி கப்பல் கடற்கரும்புலிகள் தாக்குதலினால் தகர்த்து மூழ்கடிக்கப்பட்டது.

விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதம்.!

 

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.