கடற்கரும்புலி லெப். கேணல் அமுதம் உட்பட ஏனைய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள்.!

கடற்கரும்புலி லெப். கேணல் அமுதம், கடற்கரும்புலி லெப். கேணல் யாழினி, கடற்கரும்புலி மேஜர் கதிரோவியன், கடற்கரும்புலி கப்டன் ஈகைவண்ணன் வீரவணக்க நாள் இன்றாகும்.

தமிழீழ விடுதலைப்போருக்கு பலம் சேர்க்கும் வகையில் 06.07.2003 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் விநியோக நடவடிக்கையின் போது காலநிலை மாற்றத்தால் எதிர்பாராமல் ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் அமுதம் / ஈழப்பிரியா, கடற்கரும்புலி லெப். கேணல் யாழினி, கடற்கரும்புலி மேஜர் கதிரோவியன், கடற்கரும்புலி கப்டன் ஈகைவண்ணன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

விடுதலையின் கனவுகளுடன் பல வெற்றிகளுக்கு வித்திட்டு காற்றோடு கலந்திட்ட உயிராயுதம்.!

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.