தமிழீழமும் – தமிழ் நாடும்.!

15 வைகாசி 1990 அன்று வெளியான விடுதலைப்புலிகள் (குரல் 14 ) இதழில் தமிழீழமும் – தமிழ் நாடும் என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை  காலத்தின் தேவை கருதி வேர்கள் இணையத்தில்  மீள் வெளியீடு செய்கின்றோம் .!

தமிழீழ மக்களும், தமிழ் நாட்டு மக்களும் வரலாற்று ரீதியாகவே இன . உணர்வினால்இறுகப் பிணைக்கப்பட்டுள்ளார்கள்.சிங்கள இனவாத அரசுகளினால் கடந்த காலங்களில் ஈழத் தமிழ் மக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன .அழிப்பு நடவடிக்கைளை சர்வதேச அரங்கிற்குக் கொண்டு வந்து அதன் மூலம் எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மைகளை உலகம் அறியச் செய்ததில் தமிழ்நாட்டிற்குப் பெரும் பங்குண்டு அத்துடன் தமிழீழத்துக்கான ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து
நிரந்தரமானதும் உறுதியானதுமானதோர் தோழனாக தமிழ்நாடு இருந்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தமிழீழும் போராடியபோதும் அதே போன்று ஆதரவையும், உதவியையும் தமிழ்நாடு வழங்கியுள்ளது. இந்திய நாட்டிற்குள் ஒர் அங்கமாக இருந்து கொண்டே இந்திய படைகளுக்கு எதிராக தமிழீழம் போராடியபோது தமிழ்நாடு,
தமிழீழத்தின் பக்கமே நின்றது.
இன்று தமிழ் மக்களின் சுயநிர்ணயமைப் போராட்டம் ஒரு புதிய சூழலில் புதிய ஒரு கானபரிமாணத்துடன் இருக்கிறது .ஒரு புறம்
இந்திய மத்திய அரசின் வெளிவிவகாரக் கொள்கைக்கும் மறுபுறம் சிரீலங்கா அரசின் இனரீதியான அடக்குமுறைகளுக்கும் இடையில் தமிழீழம் இருக்கின்றது.
இந்திய அரசானாலும் சரி சிறிலங்கா. அரசானாலும் சரி இரண்டுமே தமிழிழ மக்களின்
சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை ஒடுக்கக்கங்கணம் கட்டி நிற்பது உலகம் அறிந்த விடயம் 
சிறீலங்கா அரசிற்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் தற்போது ஒரு யுத்தநிறுத்த இணைக்கமும், பேச்சுவார்த்தையும் இருக்கிறதுஎன்பதற்கக தமிழ் பேசும் மக்களுக்கெதிரான இவைாத நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு கைவிட்டுவிட்டது என்று அர்த்தம்இல்லை .

அதுபோல் தமிழீழத்தை ஆக்கிரமித்திருந்த இந்தியப் படைகள் இப்போது வெளியேறிவிட்ட என்பதற்காக இந்திய மத்தியஅரசின் வெளியுறவுக்கொள்கையில் மாற்றம்செய்யப்பட்டு விட்டது என்று அர்த்தமில்லை.

இந்தச் சூழ்நிலையில் தமிழ் மக்களின்விடிவிற்காகவும் உலக தமிழ் மக்களின் விமோசனத்துக்காகவும் நாம் எந்த நாட்டையும் நம்பியிருக்க முடியாது.நாம் நம்புவதெல்லாம் எமது சொந்தப் பலத்தையும் சொந்தச் சகோதரர்களான தமிழ்நாட்டு மக்களின் உணர்வுப்பூர்வமான ஆதரவையும், அங்கீகாரத்தையுமே.தமிழீழம் நடத்தும் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை தமிழ்நாடு அங்கீகரிக்க வேண்டும். அதை தமிழ்நாடு அங்கீகரிக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது: அண்மைக்காலமாக தமிழ்நாட்டில் நடந்து வரும் மாற்றங்கள் எமது நம்பிக்கையை வலுப்பத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
* தமிழ் இணைப்படுகொலையைப் புரிந்துவிட்டு நாடு திரும்பிய இந்தியப் படைகளை தமிழ் நாடு வரவேற்கவில்லை.

*இந்தியப் படைகளுடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கு  துரோகமிழைத்த துரோகக் கும்பல்களுக்கு தமிழ்நாடு இடம் கொடுக்கவில்லை

* தமிழ் நாட்டு சட்டசபையில் தலைவர்
பிரபாகரனை அவமதிக்கும் வகையில்
அமைந்த இந்திரா காங்கிரஸ் உறுப்பினர்களின் அாைகரீகமான கருத்துகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு குரல் கொடுத்தது.

தமிழ்நாட்டின் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தமிழின உணர்வுப் போக்கை தேச
விரோத செயலென தமிழ்நாடு இந்திரா காங்கிரஸ் தலைவர்கள் வர்ணிக்கின்றனர்.

இந்திரா காங்கிரஸ் கட்சியினரைப்பொறுத்தவரை தமிழீழ மக்களைப் படுகொலை
செய்த இந்தியப் படையைக் கண்டித்தால், அதுதேச விரோத செயல் ! அதை ஆதரித்தால் அது  தேசபக்தி.

ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தமிழீழ மக்கள் மீதான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தும் தேசப்பற்றை உதறித் தள்ளிவிட்டு தமிழிப்பற்றே மேலானது என்பதை அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் . தொடர்ந்தும் ; தமிழீழ மக்களின் . சுய நிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆதரவும், உதவியும் வழங்குவதுடன், நெருக்கடி நேரங்களில் தமிழீழமும் தமிழ்நாடும் அருகருகேகைகோர்த்து நிற்க வேண்டும்.

வெளியீடு:விடுதலை புலிகளின்  இதழ் 
மீள் வெளியீடு:வேர்கள் இணையம்.!

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் “

 

Leave A Reply

Your email address will not be published.