தமிழீழ உட்கட்டமைப்பு (தமிழீழத்தின் பிராதான நகரங்கள் )

சுயநிறைவான, தன்னில்தானே தங்கிநிற்கும் பொருளாதார வாழ்வுடைய சமூகமாக எமது சமூகம் உருவாக வேண்டும் என்பதே, எனது விருப்பம். மக்கள் தம்மைத்தாமே ஆளும் உரிமையுடைய சனநாயாக ஆட்சிமுறையையே நான் விரும்புகின்றேன். இந்தப் புதிய சமூகத்தில், உழைக்கும் மக்கள் மத்தியில் பொருளாதார சமத்துவம் நிலவவேண்டும்.

 – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

 

தமிழீழவிடுதலைப்புலிகள்  போராடியது தமிழ்ர்களுக்கான ஒரு சுதந்திர தனியரசை நிறுவது தான் இதனடிப்படையில் மக்கள் நலன்  கருதி எமது தேசியத் தலைவர் சிந்தனையிலிருந்து பல்வேறு அடிப்படை   உட்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது .அப்படி குறித்த  உட்கட்டுமானங்கள் பற்றிய தரவுகளை எமது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்  என்ற நோக்கோடு தமிழீழ உட்கட்டுமானங்கள் பற்றிய தரவுகளை  உங்கள்  வேர்கள் இணையத்தில் பதிவு செய்கின்றோம் 
 
  • பகுதி -1தமிழீழத்தின் பிராதான நகரங்கள்
ஆரம்பநிலை – குழுநிலை
 
1.1 தமிழீழத்துக்கான உட்கட்டுமான அமைப்பை வடிவமைத்தல் தொடர்பாக ஆராய்வதற்கென 1993
ஜூலை 15-ம் நாள் யாழ் பலகலைககழகததIல நடைபெற்ற கூடடததல இறைமையும் தன்னாட்சியும்
கொன்ட  தமிழீழம் (இலங்கையின் வடக்கு – கிழக்குப் பிரதேசம்) தனக்கேற்றதான வகையில் எதிர்கால
உட்கட்டுமான அமைப்பைத் தீர்மானிப்பது தொடர்பான பல கருத்துக்கள் பரிமாறப்பட்டன
1.2 உட்கட்டுமான அமைப்புத் தொடர்பாக ஆக்கபூர்வமாகவும், முழுமையாகவும் ஆராய்வதற்கு ஏற்றதாக
எட்டுக் (8) குழுக்கள் அக்கூட்டத்தில் தெரியப்பட்டன. அக்குழுக்கள் வருமாறு :-
I. நகரங்கள் 
2. தெருக்கள் இரும்புப்பாதைகள், விமான நிலையங்கள்
3. கடற்போக்குவரத்தும், துறைமுகங்களும்
4. மின்சாரம்
5. தொலைத்தொடர்பு
6. நீர்ப்பாசனமும், நீர் முகாமையும்
7. கைத்தொழில்
8. நீர் வழங்கலும், வடிகால் அமைபபுமம்
1.3 ஒவ்வொரு செயற் குழுவும் அதற்கெனச் சிறப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயம் தொடர்பாக முதலில்
விரிவாக ஆராயவேண்டுமென்றும், அதன் பின் ஏனைய செயற் குழுக்களுடன் கலந்துரையாடி விடயங்க
ளைத் தொடர்புபடுத்தி ஆராயவேண்டுமென்றும், அவற்றின் அடிப்படையிற் பெருந்திட்டம் (MasterPlan)
உருவாக்கப்படவேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது
1.4 பிரதான நகரங்களின் அமைவிடம் முதலில் தீர்மானிக்கப்படவேண்டும் என்றும், அதனடிப்படையிலேயே
ஏனைய விடயங்கள் பற்றிய ஆலோசனைகளையும், தீர்மானங்களையும் செயற்றிறன் உடைய முறையில்
மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது .
-தொடரும் 
 
   -ஆக்கம் :தமிழீழ பொருண்மிய  மேம்பாட்டு நிறுவனம் 
வெளியீடு:அனைத்துலக செயலகம்  ,தமிழீழ விடுதலைப்புலிகள் 
மீள் வெளியீடு :வேர்கள் இணையம் 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
 

Leave A Reply

Your email address will not be published.