சமரும் மருத்துவம்.!

0
  அருகில் இருப்பதையே   அவதானிக்கமுடியாத அந்த கார்இருள், அதற்து வலுச்சேர்ப்பதற்காக வனத்து நட்சத்திர ஓளி வருகைக்குத் தடைவிதிக்கும் மழை மேகங்கள் அவை தெளிக்கும் நன்னீர்த் துளிகள் உடலைக் குளிர்விக்கும் நேரம் , தாங்கள்பாதம் பதியும் அன்றி மூசசு விடும்  ஓசையோ அவர்கள் செவிகளையே சேரக்கூடாகஅவதானத்துடன் கரும்புலிகள்  அணியொன்று ஆனையிறவுத் தளத்தை ஊடறுத்துச் செல்கின்றது. அவர்களின் இதய ஓசை
மட்டும் அவரவர் செவிப்பறையை அதிர்விக்கிறது.
தங்கள் சிறு அவதாமின்மையும் எதிரியை உசாரடையச் செயது விடலாம்  கார்ணம் தப்பினால் மரணம் என்பது இவர்களுக்கு மட்டுமன்று இவர்களால் பெற்றுக்கொடுக்க இருக்கும் வெற்றி தேவதைக்கும் என்பது அனுபவங்களின் பாடம்
மேற்படி எண்ணங்களால் சூழப்பட்டவண்ணம் அவ்வணி நகர்கிறது.
அப்பொழுது அவர்களின் ஒருவர் காலில் பாம்பு ஒன்று தன் பல்வரிசையைப் பதிக்கிறது
பாம்பென்றால் படையும் நடுங்கும என்பர்ஆனால் இவர்களிற்குப் பயம் மறந்து பல
காலம் ஆகிவிட்டது. எதிர்ப்பார்க்கப்பட்ட  ஆபத்துககளை எதிர்கொள்வது ஒப்பீட்டளவில்
இலகுவானதே இதற்கமையப் பாம்பினால் கடியுண்டவர் களமருத்துவர் ஒருவருடன்
இணைந்து இருவருமாகப் பற்றையொன்றினுள் புகுநது பதுங்கிப் பாதுகாப்பாக தம்மை உருறைத்துக்கொள்கின்றனர்.
தரைவாழ் பாம்பினங்களில் 70%ஆனவைநஞ்சற்றவை. எனவே கடித்த பாம்பு
ஆபத்தற்றதாக இருப்பதற்கு  சந்தர்ப்பங்கள் உறுதி செய்யலாம் . இதனைச் செய்வதற்கு
வெளிச்சம் வேண்டும் எதிரியின் குகையி னுள் ஏற்படுத்தப்படும் சிறு வெளிச்சமும்
மலைமேல் விளக்காகும் .  கற்ப்பனை   கடந்த ஆபத்துக்களை  கண் எதிரே கொண்டுவரும்
எனினும் செயற்பட்டே ஆகவேண்டும். ஒருவாறு மெல்லிய  ஒளிக்கதிரின் உதவியுடன்
நாளமொன்றிலிருந்து வெளியெடுக்கப்பட்ட குருதியானது உறைவிடப்படுகிறது. கடித்த
பாம்பு நஞ்சற்றது என்பது உறுதி செய்யப்படுகிறது.
மேற்படிக் கரும்புலியின் பலம் மீளவும்உறுதிசெய்யப்படுகிறது. இதனால் இவ்வணி
தனது தாக்குதலிலக்கை வெற்றிகரமாக
நிறைவேற்றி இழப்புக்கள் எதுவும் இன்றி   மீள்கின்றது. ஓயாத அலை-2 வெற்றி எமதாகின்றது
01.02.1998 அதிகாலை அம்மருத்துவ  முகாம் மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. முதல் நாள் இரவு கிளிநொச்சி இராணுவத்தளம் மீதான வலிந்த தாக்குதலின் போது காயமுற்றவர்களுக்கு அவசரசிகிச்சைகள் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
விரைந்து வரும் வாகனங்களில்இருந்து இறக்கப்படுவர்களுக்கு முதலுதவியளித்தல் சிறு சிறு சத்திர சிகிச்சை செய்தல் குருதி திரவ ஊடகமம் ஏற்றுதல் , அவர்களை உடனுக்கடன் இடம் மற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் வேகமாக இடம் பெற்றவண்ணமுள்ளன . குண்டுவீச்சு விமானங்களின் இரைச்சல் விட்டு விட்டுத் தரையையும்வானையும் அதிர்விக்கின்றது. இம் முகாம் தாக்கப்படலாம் எனும் ஐயம் எழுகிறது .உடனேயே எல்லோரும் காயமடைந்தவர்
களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றவும் நிலக்கீழ்ப்பதுங்குழியினுள்
கொண்டு செல்லவும் முயற்சிக்கின்றனர் அதற்கு போதிய அவகாசம் இல்லாமலேயே
மருத்துவ   முகாம்  வான் தாககுதலற்குள்ளாளாகின்றது.இதன் போது பூநகரி வெற்றித் தாக்குதல் முதல் இன்று வரையிலான சமர்களில்பல போராளிகளின் உயிர் காத்த இராணுவ
மருத்துவர்களான மேஐர் சுசில் , மேஐர் ரோகினி மற்றும் களதள மருத்துவப் பொறுப்பாளர்களான மேஜர் திவாகர், மேஜர் எஸ்தர் உட்பட 43 பேர் வீரச்சாவடைகின்றனர். மேற் படி கசப்பான அனுபவங்கள் தொடராமல் இருப்பதற்காகத் தொடர்ந்த தாக்குதல் திட்ட மிடல்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டது .
இது ஓயாத அலை-2இல் வெளிப்பட்டது. ஆகாயக் கடல் வெளித் தாக்குதல்,தவளைப் பாய்ச்சல் தாக்குதல் சமர் போன்ற சமர் களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள்
காயமடைந்தனர். அவர்களைத் தன்னுள் அரவணைத்துக் காத்தது யாழ் போதனாவைத்தியசாலை. இதன்போது பணியாற்றிய நூற்றிக்கு மேற்பட்ட மருத்துவர்களும் ஆயிரத்துக்கும் அதிகமான பணியாளர்களும் தங்கள் உயிர் காக்கும் பணிக்குச் சிகரம் வைத்தனர். இவ்வளம் எம்போரிடும் ஆற்றலிற்கும் பெரும் வலுச்சேர்த்துச் கொண்டிருந்தது.
இதனையும் இது போன்ற ஏனையற்றையும் இல்லாதொழிப்பதற்கு எதிரி தன்னால்  எல்லாவற்றையும் செய்வான் என்பதில் ஐயம் இருக்
கவில்லை .
இதற்கான மாற்றீடுகளை பெறுவதற்காக தலைவர் அவர்களின் திட்டங்கள்
வருடங்களுக்கு முன்னரேயே செயல்வடிவம் பெறத் தொடங்கியிருந்தது .
1993ல் மணலாற்றில் நடைபெற்ற கொக்குத்தொடுவாய்த் தாக்குதலின்போது களமுனையிலிருந்து யாழ் மருத்துவமனையினை சென்றடைவதற்கு பல பத்து மைல் பயணிக்கவேண்டியிருந்தது. இதன்போது காப்பாற்றக்கூடியவர்கள் எனக் கணிக்கப்பட்டவர்கள் ! வீரச்சாவடைந்தமை பாதிப்பிற்குள்ளான குருதிக்கலன்கள் காலதாமதம்  காரணமாக திருத்த முடியாமல் போனதால் பலர் தம் அங்கங்கள்
இழந்தமை பயண இடர்களின்போதுஅவர்கள் அனுபவித்த மேலதிக வேதனைகள்
என பல காரணிகள் எம் மனங்களை உறுத்தின  பலமாக சிந்திக்க வைத்தன. நாங்கள்
போர்ச் சத்திர  சிகிச்சை செய்வதில் கணிசமான அளவு முன்னேறுவோமாயி ன் மேற்படி
பின்னடைவுகளைத் தவிர்க்கலாம் என உணர்ந்தோம் முல்லைச்சமரில் விழுப்புண்ணடைந்த
போராளி ஒருவர் தனது எண்ணவோட்டங்களைப் பின்வருமாறு கூறி
பிரச்சினையில்லாமல் நகர்ந்து எங்களுக்குரிய இடங்களில் நிலையெடுத்துவிட்டோம். மற்ற
இடங்களும் குழம்பின மாதிரித் தெரியவில்லை . அதனால் இத்தாக்குதுலில் பூரணமாக வெல்லுவோம். அதில் சந்தேகம் இருக்கவில்லை. ஆனால் காயமடைந்தால் என்ன
செய்யிறது முந்தியெண்டாலும்  யாழ்பாணம் ஆஸ்பத்திரியிருந்தது. பலநூறு போரா
வளிகள் காயமடைவர் என்பது வெளிப்படையானது. இதனால்இப்படியான மனநிலை
முதல் இரண்டு நாட்களிலேயே ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதன்
போது ஏற்பட்ட மருத்துவப் பளுவிற்கு வெற்றிகரமாக முகம் கொடுத்தோம் இதனால் மருத்துவம் தொடர்பாக எம்மவர் மத்தியில் இருந்தசந்தேகம் தீர்க்கப்பட்டது. இது அவர்களுக்கு
மேலதிக உளவியல் பலத்தை கொடுத்தது. இச் சமரினைத் தொடந்து ‘சத்ஜய’,’ஜசிக்குறுய் சமர்களில் ஏற்பட்ட அனுபவங்களின் விளைவான சிறப்புத் தேர்ச்சி எம் இராணுவமருத்துவர்களின் செயற்பாட்டில் வெளிப்பட்டது. இது எம் போரிடும் ஆற்ற லின் பரிம [ வளாசசககு உறுதுணையாக அமைந்தது உதாரணமாக வேவுப் புலிகளுடன் இராணுவ
மருத்துவர்களும் நகர ஆரம்பித்தனர் பல நாட்களாக  எதிரியின்  பிரதேசத்தினுள் தங்கி
நின்று வேவு எடுத்தல், சிறு சிறு அதிர்ச்சியூட் டும் பகுங்கித் தாக்குதல்களைச் செய்தல்
இராணுவப் பொறுப்பதிகாரிகளைத் தேர்ந்து கொல்லுதல் போன்ற உப  சமர்ச் செயற்பாடுகளின்போது பல போராளிகள் காயமடைவர் .
இவர்களை உடனடியாக எமது கட்டுப்பாட்டுப்பிரதேசத்திற்குள் கொண்டு வருவது என்பது
முயற்கொம்பாகும்    அவர்களின்  உயிரைத் தக்கவைக்க  வேண்டுமாயின் எதிரியின் தளங்களினுள் வைத்தே சிகிச்சைகள் மேற்கொள்ளல் வேண்டும் மேற்படி போராளிகளுக்கு
வனமரங்களின் மறைவில் பாதுகாப்பின்மையிலும் பாதுகாப்பை உணர்த்தல் வேண்டும்
இப்பணிக்காக சிறு சத்திரசிகிச்சைக் கூடமொன்றையே தம்தோள்களில் சுமந்தவண்ணம் கடுகளில் திரிந்தார்கள் எம் இராணுவ
மருத்துவர்கள். இவ்வாறான ப ணியில் ஈடுட்டிருந்தவேளை 10.11.1997 அன்று மேஜர்
சந்திரன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
சமரும் மருத்துவமும் எனக் கருததுக்களைப் பகிர்கையில், எம் மக்களின் மகத்தான
பங்களிப்பைக் குறிப்பிடல் அவசியமாகின்றது. சமர்கள் விரிவடைந்தபோதெல்லாம் இவர்கள்
காலமறிந்து. தேவையறிந்து செய்த உதவிகள்
ஞாலமறிந்தவை. சொற்களினால் ஏற்படுத்தப்படும் விபரிப்பு வரையறையைத் தாண்டியவை பொருளாதாரத் தடை, மருத்துவத்தடை எனப் பல தடைகளின் பாதிப்பைத்தாண்டிதம் போராளிகளுக்காக இரத்த தானம் செய்தனர். மேலும் அறுசுவை உணவுகளைப்
 பதமறிந்து செய்து தருதல். இரகசிய பாதுகாப்பிற்கு ஒத்துழைத்தல் சொந்த பந்தங்களைத்
 துறந்தவர்கள் விழுப்புண் வேதனையில் துடிக்கையில் தாதியாய் பராமரித்து தாயாய் பாசமழை பொழிந்து அவர்தம் வேதனையைக் குறைக்க உதவியமை எனப்பட்டியல் விரிக்க
லாம்.
இத்தனைக்கும் மேலாய் இவர்தம்சொந்தப் பாதுகாப்பைக் கவனத்திற் கொள்ளாமை எமை மெய்சிலிர்க்க வைத்தது.
வாகசாரதிகள வந்தவர்கள் மழையிலும் வான் தாக்குதலுக்கு இடையே
யும்தம்  வாகனங்களை லாவகமாகச் செலுத்தியமை எமக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்ததது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிலர்தங்கள் உயிரை சமர்த்தேவதைக்கு அர்ப்பணித்தமையும் குறிப்பிடத்தக்கது
10.06.1998 காலை சுதந்திரபுர கிராமம்  வழமைபோலவே சுறுசுறுப்பாக இயங்கிக்
கொண்டிருக்கிறது. திடீரென வான்பரப்பை ஆக்கிரமித்த கிபீர் குண்டுவீச்சுவிமானங்கள்  மக்கள்குடிமனைகளை துவம்சம்  செய்கின்றன. ஆனையிறவு இராணுவமுகாமில் இருந்து ஏவப்பட்ட ஆட்லறிகளும்  துணையாகசசேர்ந்து கொள்கின்றன.
விளைவு பல பொதுமக்கள் உடல்கள் சின்னாபின்னமாகச் சிதம்பிக் கிடக்கின்றன இன்னும் பலர் படுகாயமடைந்து ஈனக்குரல் எழுப்புகின்றனர். தாக்குதல் சிறிது ஓய்ந்தவுடன் மீட்புப் பணியில் பொதுமக்களும் போராளிகளும் ஈடுபடுகையில் மீண்டும்
அக்கிராமம் வான் எறிகணைத்  தாககுதல்களினுள் சிக்கிக் கொள்கின்றது. வானையும் மண்ணையும் புகைமண்டலம் இணைந்திருக்க இதனுாடு மீட்கப்பட்டவர்கள் புதுக்
குடியிருப்பு பொதுமருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றனர் பெருமளவில் மக்கள் காயமடைந்தனர் எல்லோருக்கும் சிகிச்சையளிக்க போதிய வசதி
அம்மருத்துவமனையில் இருக்க வில்லைஅதனால் அவர்களில் பலர் விடுதலைப்
புலிகளின் சத்திர சிகிச்சை கூடங்களுக்கும் கொண்டுசெல்லப்படுகின்றனர். அவசர
அவசரமாக த்தலுக்கான சிகிச்சைஅளிக்கப்படுகிறது
இவ்வாறு எதிரி பெருமெடுப்பில் எம்மக்கள் மீது திடீரெனத் தாக்குதல் தொடுக்
கும்போது பெரும் எண்ணிக்கையில் மக்கள்காயடைவர். மேலும் விரைவான உறுதி
யான வெற்றிகள் வேண்டி இராணுவ விஞ்ஞானத்தினுள் இதுவரை இணையாத பல
முறைகளில் எதிரி மீது தாக்குதல் தொடுக்கும்போது ஒருசில மணிகளினுள் பலருநூாறு
போராளிகள் பலவகைக காயங்களுககு உள்ளாவர். இதன்பொழுது இவர்களிற்கும்
உயிர்காத்தலுக்கு முன்னுரிமை கொடுத்துசிகிச்சை அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம்
ஏற்படுகின்றது. எங்களின் மருத்துவ மற்றும் ஏனைய வளங்களும் மட்டுப்படுத்தப்பட்டுள்
வளமை குறிப்பிடததககது. இதனால் ஒவ்வொருவருக்கும் நீண்டகால நோக்கில்
பூரண திருப்தி தரக்கூடிய வகையில் சிகிச்சை செய்ய முடியவில்லை இதனால்
பொருந்தும் என்புகளில் ஒழுங்கின்மை அறுந்த நரம்புகள் சீரிய முறையில் பொருத்
தப்படாமை, முகம் போன்ற பகுதிகளில் அவலட்சணம் தரும் தோற்றங்கள் காணப்படுதல் போன்ற பாதிப்புகள் பலரில் தொடர்கின்றன. இவ்வாறான பாதிப்புக்களின் தாக்கததைக்  குறைபதறகு துறைசார் நிபுணத்துவ உதவி தேவைப்படுகின்றது. மேற்படி
செய்தியை போர்ச்சிலுவை சுமக்கும் மக்கள்
சார்பில் உலகெங்கும் பரநது வாழும் எம்மினிய உறவுகளின் கவனத்திற்கு கொண்டுவர இவ்வேடு முனைகின்றது.
நன்றி 
சமரும் மருத்துவம் 
-தூயவன் 
(எரிமலை இதழ் ) 
     மீள் வெளியீடு:வேர்கள் இணையம் 
 முதல் இணையம்  தட்டச்சு உரிமை :வேர்கள் இணையம் 
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Leave A Reply

Your email address will not be published.