தாயக நேரம்:2018-02-20 19:20:52

நினைவு

தேசிய தலைவர் சிந்தனைகள்

வரலாற்றில்

உயிராயுதம்

“நான் புறப்படுகின்றேன்…. இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது” கரும்புலி லெப் கேணல் போர்க்.!

வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் அதன் இருதயத்தில் மாங்குளம் சிங்களப்படை முகாம் இருந்தது. அது அங்கு பல அட்டூழியங்களைச் செய்து வந்தது. இரண்டாவது ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து இம்முகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்படை முகாம் மீது தாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது. அப்படை முகாம்மீது கரும்புலித் தாக்குதல் நடத்தி அம்முகாமைக் கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்படுகிறது. இத்தாக்குதலை தலைமைதங்கி வழிநடத்திய தளபதி பால்ராஜ் சொல்லும்போது. “நாங்கள் இம்முகாம் தாக்குதலுக்கான திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது “மாங்குளம் […]

கடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி.!

உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள். அங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது.   “இவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி […]

கடற்கரும்புலி கப்டன் மணியரசன்.!

“பதினைந்தும் நிரம்பாத பாலக வயதில், தாயகத்துக்காய் தன்னையிர்ந்த கரும்புலி; என கருவில் விளைந்த பிள்ளை” என்று, தமிழீழத் தாயை தலைநிமிர்ந்து சொல்லவைத்த அடலேறு அவன். அந்தத் துடியாட்டமும், துடுக்கான பேச்சுக்களும் எங்களது நெஞ்சுக் கூட்டுக்குள் அவனது நினைவுகளைப் பதிவிட்டுப் போய்விட்டன. இந்தச் சின்ன வயதிலும், பிறைச்சந்திரன் போல ஒரு மெல்லிய மொட்டை, அகவைக்கு ஏற்ற அளவில் குழந்தை வளர்ச்சி, குறும்புச் சிரிப்போடு ஓர் உருண்டை முகம். நிமிர்ந்த லாவகமான திடகாத்திரமான உடல்வாகு. எங்கள் கண்ணெல்லாம் அந்த வண்ணக்கோலம். […]