தாயக நேரம்:2018-02-20 19:20:46

நினைவு

தேசிய தலைவர் சிந்தனைகள்

வரலாற்றில்

உறங்காத கண்மணிகள்

மேஜர் மில்ரன்.!

“தனம் அத்தான் இருந்திருந்தால் அவனைத்தான் கலியாணம் கட்டியிருப்பன் இப்பவும் அவனை மாதிரி ஒரு கறுவலைத்தான் கட்டியிருக்கிறன்.” அவனது பள்ளித் தோழி விமலா இப்படித்தான் நினைவு கூருகிறாள். அவனது, அம்மாவின் மொழியில் கூறுவதானால், “அவனோட ஆரெண்டு இல்லை – எல்லோரும் வந்து ஒட்டிக்கொள்ளுவினம். அவன் ஊரில இருந்து ஓமந்தைப் பள்ளிக்கூடத்துக்குப் படிக்கப் போகேக்க ஊர் பெடி, பெடிச்சியள் எல்லாரையும் அவன்தான் சாச்சுக்கொண்டு போறவன்.” அவனது கறுத்த முகத்தில் அப்படி ஒரு வசீகரம் என்று சொல்வதைவிட உள்ளார்த்தமாக உண்மையாக, நேர்மையாக, […]

என்றும் எங்களுடன் .!

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றும் எங்களுடன் சாள்ஸ்! கேணல் சாள்ஸ் தொடர்பாக விடுதலைப் புலிகளின் புலனாய்வுப்பிரிவுப் பொறுப்பாளர் பொட்டு அவர் தெரிவித்தவை… “புலனாய்வுத்துறையின் தாங்கும் சக்தியாக ஒரு மாவீரனாக கேணல் சாள்சைப் பார்க்கின்றேன்”. போர்க் களங்களில் தன்னை ஆகுதியாக்க கேணல் சாள்ஸ் பல தடவை முன்னின்றுள்ளான். ஆனால் போர் களத்தின் வெளியே நின்று போர்க் களத்தின் அழுத்தத்தின் சக்தியாக நின்றுஇ உழைத்து அந்த உழைப்பின் சக்தியாக நின்ற சாள்சை நினைவு கூரவேண்டும்.சில நடவடிக்கைகள் கடினமான சூழலில் […]

கேணல் சாள்ஸ்.!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ் சாள்ஸ் உண்மையில் எல்லோருக்கும் தெரியாத ஒருவர். ஆனால் எதிரிக்கு இவரை நன்கு தெரியும். கடந்த காலங்களில் பல வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்திய பல வெற்றிகரமான தாக்குதல்களை தெற்கில் தளம் அமைத்து வழிநடத்திய தளபதி. யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கேணல் கிட்டண்ணாவின் நிர்வாகத்தின் கீழ் குடாநாட்டுப் படையினர் முகாம்களுக்கு முடக்கம் காண வைக்கப்பட்ட போது பாடசாலையயில் கல்வி […]

கேணல் சார்ள்ஸ்.!

சொன்னால் முடியாத சரித்திரமாக… “என்னால் முடியும்” கேணல் சார்ள்ஸ்.! 2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம். பயணத்திட்டத்தை முறைப்படி தலைவருக்கு முன்வைக்கும் சந்திப்பு. தலைவரின் புருவம் உயர்கின்றது. இப்ப மன்னாருக்கு ஏன் போகவேண்டும்? ” நீ இப்போது அங்கு போய் என்ன செய்யப்போகின்றாய்?” […]

நிமிர்ந்த பனை.!

சிலந்திவலைப் பின்னலாகிப் படர்ந்திருந்த இந்தியர்களின் கையில், தமிழீழம் சிக்கிப்போயிருந்தது ஒரு காலம்.மறக்க முடியாத அந்த நாட்களில் யாழ்ப்பாணத்தில் நின்றுபிடித்து புலிகளின் சுவடுகளைப் பேணிக்காத்து நிலைநிறுத்தி வைத்திருந்த வீரர்கள், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிலபேர்தான். அந்தச் சிலபேருக்குள் நேற்றுவரையும் எஞ்சியிருந்தவந்தான் சூட். அவனை விளங்கிக்கொள்ள அந்த நேரத்து “இராணுவச் சூழ்நிலை” யைப் புரிந்துகொள்ளவேண்டும். அந்த சூழ்நிலையைப் புரிந்து கொள்ள வலிகாமத்தின் தரையமைப்பைத் தெரிந்துகொள்ள வேண்டும்.தமிழீழத்தில் வேறெங்கும் இல்லாதவிதமாக முற்றுமுழுதான நகரச் சூழலை பெரிய அளவில்கொண்ட புவியியல் அமைப்பையும், குறைந்தளவு நிலத்தில் […]

கப்டன் திவாகினி.!

கப்டன் திவாகினி தொலைத் தொடர்பாளராய் பணி ஆரம்பித்து நிர்வாகப் பணியும் இடையிடையே போர்களப்பணியும் ஆற்றியவள். அலைகள் விரிந்து ஓயாத அலை மூன்று வீச்சம் கொண்ட தருணத்தில் ஆட்பற்றாக்குறை நிவர்த்தியாய் தருணத்திற்குப் பொருத்தமாய் எல்.எம்.ஜி (L.M.G) கனரக இயக்குநராய் வேவுப்புலியாய் வேண்டிய விதமாய் அடையாளப்பட்டுக் கொண்டவள். இயல்புச் சுபாவத்தில் தனித்த கலவை அவள். அதிகம் நெருங்கிக் கொள்ளாதவர்களுக்கு அவள் கடுமை அடிதடி அடாவடி. நெருங்கியவர்களுக்கு காரியவதி கண் பார்த்தால் கை செய்யும் நுட்பக்காரி அன்னியையும் பொன்னியாக்கும் கைவரிசைக்காரி. மனமுண்டானால் […]

லெப். கேணல் மல்லி

எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் மல்லி.! லெப். கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன். இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன். இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு என்னும் இடத்தில் பிறந்தான். நீண்ட போராட்ட வாழ்வில் ஒயாது கடுமையாக உழைத்தவன். தனைவருத்தி தன்னொளி பார்த்தவன். அமைதிப் போர்வையுடன் வந்த இந்தியப் படைகள் முள்ளியவளையில் முகாம் இட்டிருந்தன. 1990ம் ஆண்டில் இம்முகாம் மீதான தாக்குதலில் பங்கேற்று […]

கேணல் சங்கீதன் .!

வெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் கேணல் சங்கீதன் .!   உளவுத்தலமைக்கு கடைசிவரை மதி உரை (உறுதி) கொடுத்து உயர்ந்தவனே உயிர்போகும் இறுதிவரையும் உயர் இரகசியங்களை தன்னகத்தே காத்தவனே.! வெளிவராத இரகசியங்களின் வெளிச்சம் இவனே.! தேடித் தேடித் தான் படித்து தேர்ந்தெடுத்து பலரை வளர்த்து விட்ட வித்தகனே.! எதிர்காலத்தை நிகழ்காலத்தில் கணித்து மதிப்பீடுகளை மனம் கோணாது முன்வைத்த விவேகனே.! ஈழப்போரின் கடசிக்களம்வரையும் ஈகம் ஒன்றை தவிர வேறொன்றையும் தேர்ந்தெடுக்காத புனிதனே விழுப்புண் ஏற்றபோதும்.! விசாரணையில் சூட்சுமம் அவிழ்த்து விசமிகள் […]

வெற்றிக்கு வித்திட்ட வேங்கைகள் -ச. பொட்டு அம்மான்.!

பூநகரி வெற்றி, விடுதலைப் போரின் பரிமாணத்தை முற்றிலும் மாற்றியமைத்த வெற்றி. “தனது பூநகரி முகாமை நாம் தாக்க எண்ணியது எதிரிக்குத் தெரிந்துவிட்டது”. “எமது எண்ணம் எதிரிக்குத் தெரிந்து விட்டதென்பதும் எமக்குத் தெரியும்”. “தனக்குத் தெரிந்தது தெரிந்து, நாம் ஏற்பாடுகளைத் தொடர்வதைக் கண்ட எதிரி, தனது நிலைகளை மேலும் பலப்படுத்திய போதும், நாம் எம் திட்டத்தில் சிறு மாற்றங்கள் செய்தோமே தவிர கைவிட்டுவிடவில்லை”. எல்லாக் கவசமும் அணிந்த “கோலியாத்” ஆக பூநகரி முகாம் போர்க்கோலம் பூண்டு நின்ற போதும், […]

எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்….!

22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். எல்லாளனைத் தோற்கடித்ததாகப் பெருமைகொண்ட சிங்கள இனத்திற்கு, யார் எல்லாளன் என்பதை தமிழீழ தேசியத் தலைவர் காண்பித்த நாள் அது. ஏன் இந்த உலகமும் எல்லாளனை அறிந்துகொண்டது அந்த நாளில்தான். இந்த எல்லாளன் நடவடிக்கை ஒரு சில மணி நேரங்களுக்குள் நடந்து முடிந்துவிட்டபோதும், இதற்கான திட்டமிடல்களும், பயிற்சிகளும், வேவுகளும் மிக நீண்ட காலமாக இடம்பெற்றன. இந்த வெற்றிக்காக […]