தாயக நேரம்:2018-02-20 19:22:51

நினைவு

தேசிய தலைவர் சிந்தனைகள்

வரலாற்றில்

சமர்க்களங்கள்

இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர்…!

22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அனுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள். இளங்கோ நிலைமையை அவதானிக்கின்றான். தனக்குச் சாதகமான நேரம் வரும்வரை காத்திருந்தான். அந்த நேரமும் வந்தது அவன் […]

புலோப்பளைச்சமர்..!

யாழ்தேவி முறியடிப்பு – சாதகமற்ற வெட்டவெளியில் எதிரியின் மிகப்பெரும் படையெடுப்பை எதிர்கொண்டு முறியடித்திருந்தனர் ‘யாழ்தேவி’ என்ற பெயர் முன்னர் தென்னிலங்கைக்கும் யாழ்ப்பாணத்துக்குமி்டையில் போக்குவரத்தில் ஈடுபட்ட தொடரூந்தைக் குறிக்கும். 28.09.1993 அன்று ஆனையிறவுப் பெரும்படைத்தளத்தின் ஒரு முனையான இயக்கச்சியிலிருந்து புலோப்பளை ஊடாக யாழ்ப்பாணம் நோக்கிய பெரும் படைநகர்வொன்றை சிறிலங்கா அரசபடை செய்தது. அந்தப் படை நடவடிக்கைக்கு அரசு சூட்டிய பெயரும் “யாழ்தேவி” தான். இராணுவம் முன்னேற எடுத்துக்கொண்ட நிலப்பகுதி தமிழர் சேனைக்குச் சாதகமற்ற பகுதி. முதன்மைச் சாலையான A-9 […]

வவுனியாவை அதிர வைத்த புலிகளின் மும்முனைத் தாக்குதல்…..!

வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர். வவுனியாவில் நகரின் தென்பகுதியில் வன்னிப் பிராந்திய இராணுவத் தலைமையகம், விமானப்படைத் தளம் ஆகியவற்றை உள்ள டக்கியதாக அமைந்திருந்த ஜோசெவ் படைத்தளத்தின் மீது புலிகள் நடத்திய மூன்று முனைத் தாக்குதல் படைத் தரப்புக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.   கடந்த செவ்வாயன்று (09) அதிகாலை வேளையில் புலிகளின் […]

வான் புலிகள் விமானத் தாக்குதல்கள்.!

வான் புலிகள் தொடரும் விமானத்தாக்குதல்கள் : புதிய பரிமாணத்தில் ஈழப்போர் விடுதலைப்புலிகள் அண்ணளவாக ஒரு மாதகால இடைவெளிக்குள் மூன்று வெற்றிகரமான விமானத்தாக்குதல்களை நடத்தியமை முழு உலகையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது. இவற்றில் இரண்டு தாக்குதல்கள் சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு நகரத்தின் மையப்பகுதியில் உள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. கட்டுநாயக்கா இராணுவ விமானத்தளம் மீதான வான்புலிகளின் தாக்குதல்கள் கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றது. இதன்பின் வான் புலிகள் கடந்த 24ம் […]

ஓயாத அலைகள் – 01 முல்லை வெற்றிச் சமர்.!

யாழ். குடாவிலிருந்து விடுதலைப் புலிகள் தமது இயங்குதளத்தை வன்னிக்கு மாற்றிக்கொண்டபோது, புலிகள் பலமிழந்து வன்னிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என்று சிங்கள அரசு மேற்கொண்ட பரப்புரை, 18.07.1996 அன்று அதிகாலை வேளையில் முல்லைப் படைத்தளத்தின் தடையமைப்பினுள் வெடித்த டோப்பிட்டோவின் வெடியோசையோடு முடிவுக்கு வந்தது. ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல், இதன் பெயரிற்கேற்ப பிற்பட்ட காலத்தில் ஓயாத அலைகள் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட வெற்றிகர வலிந்த தாக்குதல்களிற்கான முதற்படியாக அமைந்து […]