தாயக நேரம்:2018-02-20 19:18:02

நினைவு

தேசிய தலைவர் சிந்தனைகள்

வரலாற்றில்

தாயக கவிதைகள்

பூத்த கொடி பூக்களின்றி வதங்கிப் போய்க் கிடக்கிறது

பிறப்பிற்கு மட்டுமல்ல மானிடர்களின் இறப்பிற்கும் அர்த்தமுண்டு இருப்போம் என்று நினைப்பவன் கண்களைத் திறப்பதிலிருந்து கடைசி வரை யாரோ என்ற சுடலை ஞானத்தை அளிப்பது வரை பொதுவாக எல்லா இறப்புக்களுமே விதம் விதமான பல போதனைகளை வழங்குகின்றன. முதுமையையும், இறுதி ஊர்வலத்தையும் கண்டு விழித்த இள இந்து அரசகுமாரன் சித்தார்த்தனே புத்தனானான். முழு உலகையும் பிடித்த அலெக்ஸ்ஜாண்டரிற்கு ஆறடி நிலமே தேவை என்ற சுடலை ஞானத்தை உணரத்தியதும் இந்த மரணமே. மெய்ஞஞான நாட்டமுள்ளவர்களாலேயே மனதார உணர இயலாத நீர்க் […]

பார்வதி அம்மாள்! இது ஒரு தாயின் பெயரல்ல! ஒரு தீயின் பெயர்!

தேசத் தாய்க்க்கு எங்கள் இறுதி வணக்கம்! பார்வதி அம்மாள்! இது ஒரு தாயின் பெயரல்ல! ஒரு தீயின் பெயர்! இத் தீயிலிருந்து பறந்த ஒருபெரும் காட்டுத்தீயாகியது! சிங்கள இனவெளி அரசுகளை உலுக்கியது! எதிரிகளை இடியெனத் தாக்கி நடுநடுங்க வைத்தது! தேசத்துரோகிகளைத் தேடி வேட்டையாடியது! குன்றாத வீரமும், குமுறும் இலட்சிய வேட்களையும், விட்டுக்கொடுக்காத விடுதலை நாட்டமும் சுமந்து தமிழீழ மண்ணெங்கும் வலம் வந்தது! நெருப்பாறுகளை நீந்திக் கடந்து நிமிர்ந்து நடந்தது! அவன் – எமது மக்களின் நெஞ்சம் நிறைந்த […]

பார்வதியம்மாள் மறைவுக்கு கவிஞர் வாலி எழுதிய கண்ணீர் கவிதை.!

பார்வதியம்மாள் மறைவுக்கு கவிஞர் வாலி எழுதிய கண்ணீர் கவிதை சொல்லைக்  கல்லாக்கி… கவிதையைக் கவண் ஆக்கி… வாணியம்பாடி மேடையைக் களம் ஆக்கி கடந்த சனிக்கிழமை அன்று வாலி வாசித்தது கவிதை.. இல்லை.. வெடித்து கிளம்பிய வெந்நீர் ஊற்று..அது இது… கவியரங்கம் தொடங்குமுன் – ஒரு கண்ணீர் அஞ்சலி… ஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப் பெருமாட்டியைப் பாடுதலின்றி வேறு வேறுண்டோ எனது வாய்க்கு? மாமனிதனின் மாதாவே ! – […]

சின்னச் சின்னப் பிள்ளைகள்.!

சின்னச் சின்னப் பிள்ளைகள் நாம்-ஈழ மண்ணின் வித்துக்கள் நாம் அகிலம் எங்கு விழுந்தாலும் – தமிழர் பண்பால் தழைத்தோம் நாம் இரவும் பகலும் உழைத்திட்டார்- தம் கண்ணைப் போலே காத்திட்டார் மாம் உள்ள எம் பெற்றோர்- மதிப்பாய் வாழப் பழக்கி விட்டார் எண்ணும் எழுத்தும் படிக்கின்றோம் -தமிழை நன்றாய்க் கதைக்கின்றோம் ஈழ விடுதலைப் போர் பற்றி -முற்றும்  முழுதாய் சொல்லிடுவோம் மண்ணில் அழியாத் தியாகிகள்-இவர் விண்ணை மிஞ்சும் வீரர்கள் நுண்மதி  படைதத தலைவராக எங்களின் இடையே வாழ்கின்றார் […]

ஓயாது ஓயாது போராட்டம் ஓயாது.!

வீரம் வீசும் எங்கள் மண்ணை எண்ணும் எந்தன் நெஞ்சம் தேசம் தமிழ்தேசம் அங்கே ரத்தம் எங்கும் ரத்தம் நித்தம் செல்லும் வான் பறவை கொட்டும் குண்டுமழை என்உறவின் வாழ்வியலைக் கொல்லுதே!   வெள்ளைச் சீருடையுடன் பள்ளிக்குச் சென்ற பிள்ளைப்புறாக்கள் சிங்களத்தைச் சீண்டியதா சொல்லடி நாகர்கோவில் மண்ணிலே நாகரீகமின்றியே- உன் நாடறியச் செய்ததுதான் என்னடி. தத்தித்தத்திச் சென்ற தமிழ்ச் சிட்டுக்களின் தேகங்கள் வான் தழுவும் வேம்பின் கிளையில் துண்டுகளாய்த் தொங்கியதைப் பார்த்தோமே … ஆண்டவதேஞ்சமென்று ஆலயத்துள் ஓடிச்சென்றும்..   […]

காதலிக்க கற்று கொள்.!!

காதலே உன்னதம் காதலே பரிபூரணம் காதலே நேசிப்பின் “நிலாவரை” ஆதலால் மானுடனே! காதல் செய்வாய். காதலிப்பதென்று முடிவெடுத்து விட்டாயானால்’ யாரை காதலிக்கலாம்? எதிர்ப்பாலார் மீதான காதலெல்லாம் இங்கு காமம் கலந்தே விற்பனையாகிறது. தோலில் சுருக்கம் விழுந்தவுடனேயே அதிகமான “காதல்கள்” அஸ்தனமனமாகி விடுகின்றன தெருநாயும் காதலித்தே கலவி செய்கிறது. இதில் தெய்வீகம் இருப்பதென்பதெல்லாம் சுத்தப் பம்மாத்து. வேறேதைக் காதலிக்கலாம்? அட மானுடனே! தாயகத்தைக் காதலிக்கக் கற்றுகொள். பெற்றதாய் சுமந்தது பத்துமாதம் நிலம் சுமப்பதோ நீண்டகாலம். அன்னை மடியிலிருந்து கீழிறங்கி […]

ராஜதந்திர முச்சந்தியில் தீமூட்டியவன் தியாகச்சுடர் முருகதாசன்.!

ராஜதந்திரமுச்சந்தியில் அவன் தீமூட்டி எரிந்தபொழுதில் பெரிதாக எதுவும் நடந்துவிடவில்லை. எரிந்து கருகிய அவனின் உடல் கடந்தே உலகசமாதானம் தன் நுனிநாக்கு உச்சரிப்புகளை சொல்லி சப்புக்கொட்டிநின்றது. தாய்நிலம் மீதான தணியாத தாகமும் பக்கத்து மனிதன்மீதான பற்றுதலால் அவன் பெருநெருப்பை மூட்டி அவிந்தபொழுதினில் நாகரீகபெருமான்கள் அவமானத்தீக்கோழிகளாய் ஜெனீவா மன்றத்துள் முகம்புதைத்துநின்றனர். $புதுமாத்தளன் கடந்து இனஅழிப்பு தொடர்கையில் எரிந்தபடி முருகதாசன் ‘நிறுத்தவேண்டும் உலகம் இதை’ என்றான். ஒருகால் முறிந்த கதிரை மட்டுமே அவனின் சுயதகனம் பார்த்து விக்கித்துநின்றது.- மற்றப்படி அவனின் எரிந்த […]

நடந்து கொண்டேயிருந்து .!

கொங்கோ நாட்டு கவிதை   ஏன்னுடைய மண்ணிைலிருந்துதான் நீ வந்திருக்க வேண்டும் உன் புருவங்களைச் சூழத் துடித்துக் கொண்டிருக்கும் உன் ஆன்மாவில் அதனைக் காண்கிறேன் அதையும்விட துக்கமாயிருக்கும்.வேளைகளில் நீ நடனமாடுகிறாய் என்னுடைய மண்ணிலிருந்து தான் நீ வந்திருக்க வேண்டும்.   நடந்து கொண்டேயிரு காலம்  எம்மை அணைக்கக்  காத்திருக்கிறது உன்  விளக்கில் எரியும் எண்ணை உண்மையில் குமுறிக் கொண்டிருக்கும் என் குருதிதான் என்பதையும் அது பொங்கி வழிந்தால்   நீ  விளக்கை ஏற்றக் கூடாது என்பதையும்  இதிலிருந்து […]

புலம் பெயர்ந்த நண்பனுக்கு.!

மயிர்க்கொட்டிகளின் உயிரைக் கருக்கும் – மானுடம் வண்ணத்துப் பூச்சிகளின் அழகை ரசிக்க ஏங்குவது வெறும் பம்மாத்து ! மரங்களில் உயிர்ப்பு இருக்கும் வரைதான் வேர்களுக்கு மதிப்பிருக்கும். மரங்கள் உயிர்ப்பு இழந்தால் வேர்கள் வெறும் விறகுதான். கண்கள் இரண்டு என்றாலும் காட்சி ஒன்றாக… செவிகள் இரண்டு என்றாலும் செய்தி ஒன்றாக… கைகள் இரண்டு என்றாலும் ஆற்றும் கருமம் ஒன்றாக… பாதம் இரண்டு என்றாலும் பாதை ஒன்றாக… இருக்கும் வரையில்தான் தலைக்கு மதிப்பிருக்கும். குருடோ செவிடோ அவள் என் தாய் […]

முத்துக்குமரா!

முத்துக்குமரா! முகம் தெரியாப்போதினிலும் செத்துக்கிடக்கின்றாய் எமக்காக எனவறிந்து தேகம் பதறுகிறதே திருமகனே! உந்தனது ஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதே நீட்டிக்கிடக்கின்றாயாம் நீ உனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றி நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில் அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள். உன் மேனியில் மூண்ட நெருப்பு உன்னை எரித்ததாய் சொல்லுகின்றார் நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன். சின்ன அக்கினிக்குஞ்சே! உன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தாய் அந்தச்சோதிப்பெருவெளிச்சம் எமக்குச்சக்தி தரும் வையவாசலை எமக்காகத் திறக்கச்செய்யும். உன் இறுதி மூச்சு புயலாகித் […]