தாயக நேரம்:2018-02-20 19:23:58

நினைவு

தேசிய தலைவர் சிந்தனைகள்

வரலாற்றில்

அன்னைத்தாயகத்தின் வேர்கள்

மேஜர் கேடில்ஸ்.!

பனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசம். இப்பிரதேசத்தில் ஆனையிறவும், நாவற்குழியும் என கடல் நீரேரியும் சதுப்பு நிலங்களும் நிறைந்து காணப்படுகின்றன. இப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளனாக மேஜர் கேடில்ஸ் விளங்கினார். பதினெட்டு வயதிலேயே இப்பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கண்டாவளையில் மகாலிங்கம் இணையரின் மகனான கேடில்சிற்கு பெற்றோர் இட்ட பெயர் திலீபன். இயல்பாய் சுறுசுறுப்பும், துருதுருவென இருந்த கேடில்ஸ் புலமைப் பரிசில் தேர்வில் சித்தியடைந்து யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். […]

விடுதலைப் போராட்ட வரலாற்றில் தளபதி கிட்டு ஓர் அத்தியாயம்.!

‘கிட்டு ஒரு தனிமனித சரித்திரம். நீண்ட, ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில்ஒரு காலத்தின் பதிவு’ இது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தளபதி கிட்டுவைப் பற்றி கூறியதாகும். உலகின் சரித்திரம் காலத்திற்கு காலம் உருவாகும் சாதனையாளர்களின் சரித்திரமாகவே அமைகின்றது. அவ்வாறே ஒரு நாட்டின் வரலாறாக இருந்தாலென்ன, ஓர் இனத்தின் வரலாறாக இருந்தாலென்ன, ஓர் போராட்டத்தின் வரலாறாக இருந்தாலென்ன, அதில் சாதனையாளர்கள் சரித்திரத்தில் இடம்பெருபவர்களாக இருக்கின்றார்கள். இந்தவகையில், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் […]

யார் இந்த ராதா?

தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ். இந்துக் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப் பயணத்தில் தளபதி ராதா ஆகினார். கல்லூரியில் படிக்கும் காலத்திலும், பின்னரும் தான் ராதா எப்போதும் அழகான ஆடம்பரமற்ற உடைகளை உடுத்தும் பழக்கம் உடையவர். இதனால் யாழ். வீதிகளில் உந்துருளியில் உலா வந்த ராதாவைப் […]

லெப்.கேணல் ராதா .!

தமிழ் மக்களின் வீட்டு முற்றங்களில் பூத்துப்படர்ந்து நின்ற முல்லைப் பந்தல்களைப் பிய்த்தெறிந்து கொண்டு இரும்புச் சப்பாத்துக்கள் அத்துமீறித்தடம் பதித்தன. வீட்டின் கதவுகள் எட்டி உதைந்து திறக்கப்பட்டன. அப்பாக்களின் நெஞ்சுக்கு நேரே துப்பாக்கிக் குழல்கள் நீண்டன. அன்பான அம்மாக்களின் தலைக்கு மேலே துவக்குப் பாத்திகள் உயர்ந்தன. அக்காவும், தங்கைமாரும் அழுத குரல்கள் அர்த்தமற்றுப் போயின. இளைஞர்கள் காரணமெதுவுமின்றிச் சிறைகளில் தள்ளப்பட்டனர். தீ வைப்புக்கள், படுகொலைகள் மேலும் மேலும் தொடர்ந்தன. அதுவரை பரிட்சை மண்டபங்களிலும், நேர்முகப் பரிட்சைகளிலும் பார்வையிடப்பட்ட அடையாள […]

கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்.!

வங்கக் கடலின் நடுவே அந்த தியாக வேள்வித் தீ எரிந்து அணைந்து பல ஆண்டுகள் ஓடி மறைந்துவிட்டன. ஆயினும் தமிழ் மக்களின் மனங்கள் அதை நினைத்து நினைத்து இன்னும் எரிந்துகொண்டேயிருக்கின்றன. கேணல் கிட்டுவும், அவருடன் வந்த ஒன்பது தோழர்களும் தீயோடு தீயாகி, வங்கக் கடலில் சங்கமித்த அந்தச் சம்பவம் சரித்திரம் மறக்காத ஒரு சாவு மட்டுமல்ல, அது எங்கள் நெஞ்சங்களை நீங்க மறுக்கும் நெடும் அலையாகி, நினைவெங்கும் நிலைபெற்று விட்டதொன்று. கேணல் கிட்டு தேசியத் தலைவரால் அதிகம் […]

மன்னாரின் முத்து -லெப். கேணல் சுபன்.!

“4.30 மணிக்கு சுபன் எழும். அதுக்கு முன்னமே, சனம் வந்து அவனைப் பார்க்க நிற்கும். எழும்பினதிலிருந்து வந்தவங்களை சுபன் சந்தித்துக் கதைக்கும். சண்டைக்குப் போட்டுவந்து கலைச்சு இருக்கும்; அப்பாவும் யாரும் சந்திக்க வந்தா சந்திச்சு கதைக்கும். வெளியிலை வேலை செய்யேக்கை சரியாச் செய்வம்; இல்லாட்டி சனம் சுபநிட்ட சொல்லிடும். நாங்கள் ஏதும் சொல்லால் உங்களோட என்ன பேச்சு. நாங்க தளபதிக்கிட்ட சொல்லிக்கிறோம் என்று சனம் சொல்லும். சுபன் செத்ததை அவங்களாலை தாங்கிக்க முடியலை. மக்களின் சிக்கல்களைத் தீர்ப்பதில் […]

கப்டன் றெஜி.!

21.04.87 காலை, ஈழமுரசு பத்திரிகையில் ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதலில் படையினர் பலர் பலி. 4 மணிநேரத் தாக்குதல். நாற்பதுக்கு மேற்பட்ட மோட்டார்களை போராளிகள் பயன்படுத்தினர். என்ற செய்தியை வாசித்தேன். ஒரு ஏ.கே கூட இல்லாமல் நாங்கள் இதே கட்டத்தை எமது சொந்த ஆயுதங்களுடன் தாக்கி வெற்றி பெற்ற அந்த நினைவுகள் என்னுள் எழுந்தன. ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதல் வெற்றியில் றெஜியின் பங்களிப்பு பெரிது. அவர் வன்னியில் செயற்பட்டு வந்த காலங்களில் ஏதாவது தாக்குதல் நடத்தவேண்டும் எனத் துடியாகத் […]

மாவீரர் புரியும் சத்திய யுத்தம் .!

மாவீரர் காண்பது கணவு அல்ல: அவரது பெருமண விரிவு: ஆன்ம விசவம்: யதார்த்தத்தின் அகாலிப்பு: காலம் சுடத்து நிற்கும் உண்மையின் விஸ்வரூபம். கடந்த காலத்தையும், எதிர்காலத்தையும், பழமையையும், புதுமையையும் இணைத்துதிற்கும் மணப் பாலம், தமிழ்த் தேசியம் என்ற வரையறையான, எல்லைக் கோட்ட நாம் வரைந்த போதிலும், “யாதும் அளரே யாவரும் கேளிர்” என்ற பரந்த நாகரிகத் தளத்தில் எழுந்தது அவர்களின் எண்ணம். இதனைத்தான் விடுதலை என்போம்.   காலம், இடம் கடத்து நிற்கும் மாவீரரது மனஎல்லைப் பரப்பின் […]

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே..!

1981ம் ஆண்டு பங்குனி மாசக் கடைசியில் நீர்வேலியில் இடம்பெற்ற வங்கிப் பணப்பறிப்பு நடவடிக்கையினைத் தொடர்ந்து சிறிலங்காவின் சி.ஐ.டி. பொலிசார் எப்படியும் அதில் சம்பந்தப்பட்டவர்களைத் தேடிக் கண்டுபிடித்து விடவேண்டும் என்ற நோக்கில் அலைந்து கொண்டிருந்தார்கள். இந்தச் சம்பவத்தினைத் தொடர்ந்து தங்கத்துரை, குட்டிமணி, தேவன் என்கின்ற மூவர் இச் சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் ( அப்போது நாங்களும் அவர்களும் ஒன்றாக இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்த காலம்). தமிழகத்திற்குச் செல்வதற்காக படகேறச் சென்ற சமயம், வல்லிபுரக் கோயிலுக்கு கிழக்குப் புறமாக உள்ள கடற்கரைப் […]

இந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த வன்னிமாவட்ட முன்னாள் படைத்தளபதி மேஜர் பசிலன்.!

முல்லைத்தீவு முள்ளியவளையினை சேர்ந்த வன்னிமாவட்ட முன்னாள் படைத்தளபதி நல்லய்யா அமிர்லிங்கம் என்று அழைக்கப்படும் மேஜர் பசிலன். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்ககாலத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பசீலன் தொடக்க பயிற்சியினை இந்தியாவில் பெற்று வன்னியில் ஒர் கெரில்லா போராளியாக தன்னை மாற்றிக்கொண்டு வன்னியில் பல்வேறு தாக்குதல்களை எதிரிமீது தொடுத்து பலபோராளிகளை உருவாக்கி வன்னியில் சண்டைக்காறர்களில் சிறப்பானவன் என பெயரெடுத்தான் மேஜர் பசீலனின் வன்னி தாக்குதல் அணியில் பிரிகேடியர் பால்றாஜ் அவர்கள் ஒரு போராளியாக இருந்த கால கட்டங்களில் எல்லாம் […]