தாயக நேரம்:2018-02-20 19:20:03

நினைவு

தேசிய தலைவர் சிந்தனைகள்

வரலாற்றில்

தமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு

உறுதிதான் வலுமிக்க ஆயுதம்.!

சுதந்திரம் வேண்டுவோருக்கு உறுதிதான் வலுமிக்க ஆயுதம்.! எமது போராட்டம் எத்தனையோ சவால்களுக்கு ஈடுகொடுத்து தனது விடுதலைப்பயணத்தில் வெற்றிநடைபோட முடிந்தது என்றால், அதற்கான அடிப்படைக் காரணம் எமது இலட்சிய உறுதிதான் என்பதை நான் திட்டவட்டமாகக் கூறுவேன். நீண்ட வரலாற்று அனுபவத்தில் நான் கண்ட உண்மை இது. ஒரு விடுதலைப் போராட்டம் பல சூறாவளிகளைச் சந்திக்கிறது. பல நெருக்கடிகளை எதிர் கொள்கிறது. கொந்தளிப்பான பல சூழ் நிலைகளுக்கு முகம் கொடுக்கிறது. விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் ஒரு ரணகளம். […]

எனது சுமைகளைத் தாங்கிய இலட்சியத் தோழன்.!

எனது சுமைகளைத் தாங்கிய இலட்சியத் தோழன். மனதின் ஆழத்து உணர்வுகளை வார்த்தைகளின் சித்தரிப்பது கடினம். அதுவும் ஆன்மாவை உலுப்பிவிடும் ஓர் உணர்வுப் பூகம்பத்தை மனித மொழியில் விபரிக்க முடியாது. எனது அன்புத் தம்பி கிட்டுவின் இழப்பும் அப்படித்தான். அவனது மறைவு எனது ஆன்மாவைப் பிழிந்த ஒரு சோக நிகழ்வு. அதனைச் சொற்களால் வார்த்துவிட முடியாது. நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக, தளபதியாக, எனது சுமைகளைத் தாங்கும் இலட்சியத் தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண […]

விடுதலையின் வழிகாட்டி.!

எம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் அவர்களது காலத்தில் வாழும் பெருமையுடன் பணி தொடர்கின்றோம். தலைவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்கு ஆக்கம் ஒன்று தாருங்கள் என்று கேட்டபோது முதலில் ஏற்பட்ட உணர்வு தலைவரைப் பற்றி நான் எழுதுவதா? என்பது தான். தேசியத்தினதும் மற்றும் அக்கறையுடைய அனைவரினதும் பார்வையும் அவர் மீது உன்னிப்பாகப் பதியும் இவ்வேளையில், அவரது பண்புகளைப் பகிர்ந்து கொள்வது தலைவரது விடுதலைக்கான விழுமியங்களை முழுதாய் அறியாதோருக்கு எடுத்துச் சொல்லும் பணியாகவே அமையுமென்ற கருத்து வலுப்பட்டது. அந்தக்கருத்தின் […]

தமிழீழத் தேசியத் தலைவா நீங்கள் வாழ்க வளமுடன் !

தமிழீழ  விடுதலை ஒன்றே எமது இனத்தின் மரபு வழி விடியலாகும் என்னும்  உயரிய  இலட்சியத்தை எமக்குள் புகுத்தி மரபுவழி இராணுவம்மைத்து  லெமுரியா கண்டத்தின்  இக்கால எச்சங்களான தமிழீழத்தை உருவாக்கியவர்     தாயக  விடுதலைப் போரை எங்களுக்கு  வழிக்காட்டும்    எங்கள்    தமிழீழத்தேசியத் தலைவர் மேதகு  வே .பிரபாகரன்  அவர்கள்   இன்று தனது 63 வது அகவையில் காலடி வைக்கிறார். பெரும்    நெருப்பாறுகளைக் கடந்து  வீர வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் தமிழீழத் தேசியத் தலைவருக்கு தமிழ் தேசிய […]

சுயத்தை வென்றவன்.!

இறுவெட்டு: சுயத்தை வென்றவன் பாடலாசிரியர்கள்: ‘உணர்சிக் கவிஞர்’ காசி ஆனந்தன், பாவலர் அறிவுமதி, தா.சிவநாதன், கோசல்யா சொர்ணலிங்கம், இராஜகுமாரன், மட்டுவில் ஞானகுமார், ஷோபா. இசையமைப்பாளர்: எஸ்.கண்ணன். பாடியவர்கள்: எஸ்.கண்ணன், தா.சிவநாதன், எமிலியானோஸ், குமாரச்சந்திரன், வியயலட்சுமி, ஷோபா, அனுரா, அமுதா, ஜெகதா, பாபு, தேவிகா, ஸ்ரெபான் வலன்ரைன். உருவாக்கம்: கலை பண்பாட்டுக் கழகம், தமிழீழ விடுதலைப்புலிகள், ஜேர்மனிக் கிளை. வெளியீடு: வெளியீட்டுப் பிரிவு அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப்புலிகள். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தலைவன் பாய்ச்சல்கள் தொடரட்டும், அலைகள் ஆர்ப்பரிக்கட்டும்.!

1970ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி யாழ்ப்பாணத்தில் `தமிழ் மாணவர் பேரவை’ தனது ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியது. திருமதி. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசு தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதை தரப்படுத்தியதே அப்பேரணி நடத்துவதற்குக் காரணாகும். அதனை அடுத்து பாடசாலைகளுக்குச் சென்று விளக்கவுரை அளித்து வந்தேன். வல்வை-சிதம்பராக் கல்லூரியில் முதல் முதலாக தம்பியைப் பார்க்கிறேன். அடுத்து, வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் அவர் சார்ந்த இளைஞர்களுக்கு தமிழர் எதற்காக ஆயுதப்போராட்டத்தைத் தொடங்கவேண்டும் என்பதையும், சிங்களவர்களுக்கு முன்பே தமிழர்கள் இந்நாட்டின் […]

தமிழீழத் தலைவரும் மூன்று பெருமக்களும்.!

தமிழீழத் தலைவர் திருமிகு வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைக்கும் போதெல்லாம் எனது கருத்தில் மூன்று பெரியார்கள் தோன்றுவதுண்டு. அவர்கள் முவரும் தனியே தோன்றுவதில்லை. அந்த மூவரும் ஒரே நேரத்தில் பிரபாவில் ஒருவராகத் தெரிகிறார்கள். இக்கட்டுரையில் அவர்களது வயதை அடிப்படையாக வைத்து அவர்களை வரிசைப்படுத்துகிறேன். 1.மோசஸ்: இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, யூத மக்கள் அடிமைகளாக எகிப்து நாட்டில் வாழ்ந்தகாலம். அன்றைய எகிப்து பலமான, வளமான நாடு. தாழ்த்தப்பட்டது, கடினமானது, ஆபத்தானது என்று கருதப்பட்ட அத்தனை வேலைகளையும் […]

தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை .!

1981-ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை வேர்கள்  இணையத்தில் மீள் பதிவு செய்கின்றோம் நாம் அணிவகுத்துள்ளோம்… நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! நாம் அணிவகுத்துள்ளோம் இழந்த எமது நாட்டை மீட்க எதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான்! அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை! புயலெனச் சீறி இழந்த நாட்டை மீட்க நாம் அணிவகுத்துள்ளோம் நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்! எமது படையணி கடக்க வேண்டியது நெருப்பாறென்பது எமக்குத் தெரியும் ஆனால்… அதைத் […]

தமிழீழமும், விடுதலை பற்றிய இறையியலும்.!

தமிழ்த் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய 50வது பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, தமிழரது விடுதலைப் போராட்டம் பற்றிய எனது தனிப் பட்ட அனுபவத்தையும் எழுத விரும்புகின்றேன். எனது பதவியளிப்புக்குப் பின்னர் RUHRGEBIET தெற்கிலமைந்துள்ள கிறேபெல்டு என்ற நகரில் ஒரு திருச்சபைச் சமயத்துணைக் குருவாக நியமிக்கப்பட்டேன். அப்பாவித் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா இராணுவம் மேற்கொண்ட இனப்படுகொலைகள் காரணமாக ஒவ்வொருமாதமும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் தங்கள் நாட்டை விட்டு ஜெர்மனிக்கு வந்த காலமது. 1983ம் ஆண்டில் நடைபெற்ற கறுப்பு யூலையின் […]

சுதந்திரத்தமிழ்!

இறுவெட்டு: சுதந்திரத்தமிழ் பாடலாசிரியர்கள்: ‘மாமுனை’ மனோ இசை: சதீஸ் பாடியவர்கள்: எம்.எஸ்.விஸ்வநாதன், ரி.எல். மகாராஜன், கிருஷ்ணராஜ், புஷ்பவனம் குப்புசாமி, அனந்து, சுரேந்தர், மாட்டீன், கல்பனா, சோபியா, பாவலர் அறிவுமதி (அறிமுக உரை) உருவாக்கம்: துயவன் படைப்பகம் வெளியீடு : தமிழர் கலை பண்பாட்டுக் கழகம், நோர்வே.!   “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”