தாயக நேரம்:2018-02-20 19:17:45

நினைவு

தேசிய தலைவர் சிந்தனைகள்

வரலாற்றில்

ஒரு போராளியின் குருதிச் சுவடுகள்

உன்னத வீரன் கானகன்.!

சிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது! நெஞ்சம் உருகி வெடிகிறதே உம்மை நினைக்கையிலே…. ஒரு போராளியின் குருதியில் இருந்து…..   ■ (உண்மைச் சம்பவம்) முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி நேரங்களில், நிராயுதபாணிகளாக நின்ற போராளிகளை இனம் கண்டு, அவர்களைக் கைது செய்து நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி பெண் போராளிகளைக் கற்பழித்தும், ஆண் போராளிகளை சுட்டும் வெட்டியும் பல வகைகளில் துன்புறுத்தி கொலை செய்து புதைத்த இலங்கை காட்டுமிராண்டி இராணுவத்தின் மானங்கெட்ட வரலாறுகளை உலகமே அறியும். […]

லெப்.கேணல் கௌசல்யன்.!

சேக்ஸ்பியர் என்னும் மாபெரும் மனிதன் மனிதத்தின் ஆழங்களையெல்லாம் ஊடுருவியஓரு உன்னதப் பிறவி. யலிய சீசரின் படுகொலையை பலவாறு விளக்கும் போது “………this was the most unkindest cut of all ” எல்லாவிதமான குரூருங்களில் இது மிகவும் ஈவிரக்கம் அற்ற வெட்டு எனக் குறிப்பிடுவர். கட்டுறுதி உள்ள உடல். கண்ணிலே நல்ல குணம். புன்னகை தவழும் முக அழகு. சு.பதமிழ்செல்வன் கூறியதுபோல் எங்கள் செல்லப்பிள்ளை. பொருவில் அன்புருவமானவன். அந்த அன்பின் வடிவத்தை காணப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள். நிராயுதபாணியாக வீர அபிமன்னுவாக அவன் நின்றபோது ஆயுதம் தரித்தசிங்களபேரினவாதம் தமிழ் துரோகிகளின் பெயரில் கௌசல்லியனை படுகொலைசெய்துள்ளனர். அன்று புலேந்திரன், குமரப்பா, பின்பு கிட்டு என்னும் சகாப்தம். இன்று கௌசல்யன். இவர்களின் மறைவுகளுக்குப் பின்னால் பலவீனமான ஈனப்பிறவிகளின் செயல்பாடுகள்எம் கண்முன்னே விரிகின்றன. ஆயின் இவர்கள் இழப்புக்கள் எல்லாம் எதிரிகள் நினைத்ததிற்கு மாறாக தமிழ்தேசியத்தை தமிழர் தாயகக்கோட்பாட்டை மேலும் வலுப்பெறச் செய்துள்ளன என்பதேஇன்றைய யதார்த்தமாகும். * சி.சிவசேகரம் என்னும் கவிஞன் யாரை உள்வாங்கி எழுதினானோ நான் அறியேன் . ஆயின் அவர் குறிப்பிடும் கவிதை வரிகளான .”…………ஆழக்கிடங்கினின்று அலைகடலின் கீழிருந்து விலங்கின் குடல் கிழித்து வானவெளஹ கடந்து சுட்டெரித்த சாம்பலின் , பீனிக்ஸ் பறவையென வெட்டுண்டு கீழ் வழிந்த குருதித் துளியுயிர்த்து சஞ்சீவி மாமலையின் காற்றுறிஞ்சி நான் வருவேன். அறைகின்ற சிலுவைகளில் மரித்து உயிர்த்தெழுவேன் வானளந்து நான் வருவேன் தூண்பிளந்து நான் வருவேன் நீ நம்ப மறுக்கின்ற கதையெல்லாம் நிசமாக்க விடுதலையும் சமத்துவமும் முழங்குமொவ்வோர் மு~ச்சினிலும் அடிமைத்தனத்துடனே அடக்குமுறை உள்ளவரை மறுபடியும் மறுபடியும் மறுபடியும் நான் வருவேன்……” என்னும் கவிக்கோலங்கள் எங்கள் கௌசல்யனுக்காகவே எழுதப்பட்டதோ? ஆம் தமிழ் தேசியத்தின் மூச்சில், தமிழர் தாயகக்கோட்பாட்டில் அவன் சம்பவாமி யுகேயுகே. சேக்ஸ்பியர் கூறியதுபோல் …. . ”….He lives, he wakes, ’tis death is dead, not he..” கௌசல்யன் வாழ்கிறான். அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. 2005 பெப்ரவரி 7ம் திகதி தமிழர் தாயகத்தின் சோக நாள். தமிழீழ விடுதலை வரலாற்றில்விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்றுமாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல்கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம் நடந்து ஆண்டுஜந்தாகின்றது . இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின்அர்ப்பணிப்பு மிக்க சேவையும் தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது. லெப்.கேணல் கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக்கொண்டவன். தமது பாடசாலைப் பருவம் அது சிங்கள வெறி இராணுவம் தமிழர்தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்யன் மனதைசுட்டெரித்தது. தேசியத் தலைவனின் விடுதலைப் போராட்டம் அவனை ஈர்த்தது. இதன்விளைவாய் இவன் விடுதலைப் போராட்டத்தில் இணைகிறான். மனோ மாஸ்டரின் தலைமையில் அவரது இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிபெற்ற கௌசல்யன் எதிரிக்கு எதிராக தமது வீரத்தினை உறுதிப்படுத்தினான். பரந்தஅறிவும் துடுதுடுப்பும், அர்ப்பணிப்பும் விடுதலை மீதான தாகமும் கௌசல்யனை மிகச்சிறந்த போராளியாக மெருகூட்டியது. காலவோட்டத்தில் மட்டு அம்பாறை மாவட்டத்தின் நிதித்துறைப் பொறுப்பாளராக சிறந்தமுறையில் பணியாற்றிய இவன், பின்னர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தின்அரசியல்த்துறைப் பொறுப்பாளராக பொறுப்பினை ஏற்கிறான். போர்ச் சூழலில் தமிழ்முஸ்லிம் சமூகங்களிடையே இருந்த கசப்புணர்வினை மாற்றி முஸ்லிம்சகோதர்களுடன் நட்புறவை, இன ஐக்கியத்தை வளர்பதற்காக கௌசல்யன்அரும்பாடுபட்டான். காலவோட்டத்தில் தமிழ் பேசும் உறவுகளிடையேயும் கௌசல்யன் காத்திரமானநம்பிக்கை  நட்சத்திரமாக விளங்கினான்.  இது மாத்திரமின்றி மட்டு அம்பாறை மாவட்டம்போரினால் பாதிப்புற்று பொருளாதார வலுவுற்றுள்ள நிலையில் மாவட்டத்தைமுன்னேற்றமடையச் செய்ய வேண்டும் அபிவிருத்தி அடையச் செய்யவேண்டுமென்பதில் கௌசல்யனின் சிந்தனைகள்இ செயற்றிட்டங்கள் விசேடமானவை. […]

வெற்றிகளின் பின்னால்….!

“உருவங்கள் மட்டும் உள்ளார்ந்த சக்திகளை வெளிப்படுத்தப் போதுமானவை அல்ல” என்பதற்கு எங்களிடம் உதாணரமாக அமைந்தவன் நீலன். ஐந்தரையடி உயரமும், ஒட்டிய வயிறும், ‘அஸ்மா’ நோயின் பாதிப்பை வெளிப்படுத்தும் நெஞ்சறையுமென பார்ப்பவர்களுக்கு கதாநாயக அந்தஸ்த்தை கொடுக்காத தோற்றம் கொண்டவன். என்னினும் இவனது துறுதுறுப்பான விழிகள் இவனின் தேடலிற்கான இயல்பினை வெளிப்படுத்தப் போதுமானவையாகும். வெற்றியின் அத்திவாரங்களினுள் மறைந்தவர்கள் பலர் வெளித்தெரிவதில்லை. அவர்களுள் ஒருவனாக நீலனும் இருக்கிறான். அவனது வாழ்வின் சில சம்பவங்களை மட்டும் கூருவதினூடாக இவனை வெளிக்காட்ட முயசிக்கிறோம். அப்பொழுது […]

உயிர் கூட்டிலிருந்து பிரிந்தபறவை .!

  ” ஜெயரஞ்சன் A/L சோதினையில் பாஸ் பண்ணிட்டானாம். அவனுக்கு பி.கொம் கிடைச்சிருக்காம் ” என்ற செய்தி அப்பாவின் காதுக்கெட்டியது. வீட்டில் எல்லோருக்கும் அவனை நினைக்கப் பெருமிதமாயிருன்தது. அப்பா அந்தச் செய்தியையும் காவிக்கொண்டு ரஞ்சனிடம் போனார். ஆனால் அந்தச் செய்தி அவன் காதுகளுக்கு எட்டமுன்பே அவன் தன திறமைகளை இந்த தேசத்திற்க்கா அர்ப்பணிக்கத் தயாராகியிருந்தான். அப்பாவினால் அவன் முன்வைத்த வினாவிற்கு பதிலளிக்க முடியவில்லை. ஏனென்றால் அவை மறுக்கப்பட முடியாததாயிருந்தது. அப்போது அவன் பல்கலைக்கழகப் படிப்பிர்க்குள் முடங்கிபோகாமல் அவன் […]

லெப். கேணல் குட்டிசிறி.!

வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருக்கும் குண்டு வீச்சு விமானம் ‘இரையைக் கண்ட கரிக்குருவி’ மாதிரி குத்தெனச் சரிந்து பாய்கையில், விமான எதிர்ப்புத் துப்பாக்கியை சட்டென உயர்த்தி விமானத்தின் போக்குக்கு ஏற்ப ரவைகளைத் தீர்ப்பதற்கு, ஒரு தனித்திறமை வேண்டும். குட்டிச்சிறிக்கு இது நிறையவே பிடிக்கும். பெரும்பாலான சண்டைகளில் ஐம்பது கலிபர் துப்பாக்கிக்கு அருகில்தான் அவன் நின்றிருக்கிறான். சின்னவயதிற்கே உரிய போட்டா போட்டியுடன் வானூர்திகளுடன் இவன் சண்டையிடுவான். பதிந்து சரியான இலக்கைத் தாக்குவதற்கு வானூர்த்திகளை இவன் விடுவதேயில்லை. சண்டையின் முடிவில் வானூர்த்திகளின் […]

பாதங்கள் பார்த்து சுவடுகள் காத்திருக்கின்றன…!

மணலாறு; தமிழீழப் போராட்டவரலாற்றின் அழிக்கமுடியாத அத்தியாகம். புலிச்சேனையை அரவணைத்த கங்காறுத் தொட்டில். தமிழீழ விடுதலை என்ற அக்கினியைத் தன்மடி மீது வைத்துச் சீராட்டிய தாய். அக்கினியின் அத்திவாரமான எம் தலைவரைப் பொத்தி வைத்த புனிதபூமி எதிரியின் கணைகளையெல்லாம் தன் நெஞ்சில் தாங்கிய கவசம். குரங்குகளின் சில்மிசங்கள், நீரேரிகளின் மீது வென்பூக்களைத் தூவியதுபோல் மிதக்கும் கொக்குகள். மனிதவாடை கண்டவுடன் தாவியோடும் கரடிகள், மலைக்குன்றேன அசைந்தோடும் மூர்க்க யானைகள், உயர்ந்த மரங்களில் தாவியோடும் மர அணில்கள், தலைக்குமேல் குடைபிடிக்கும் பச்சையங்கள், […]

லெப். கேணல் ஜோய்

முடுகு…. முடுகு…. ஆ…. ஆ….. கிறுகு….. கிறுகு….! மெல்லிய உயரமான இருந்த ஒருவனைப் பார்த்து கமல் கத்திக்கொண்டிருந்தான். ‘ஏண்டா, கமல் இப்படி கத்துது’ நான் சதீசைக் கேட்கிறேன். சத்தம் கேட்டுத் திரும்பிய கமல் “அண்ணை இவங்கள் தான் மறுகர கோஷ்டி” என்று சொல்லிவிட்டுச் சிரிக்கிறான். இது என்ன புதுக் கோஷ்டி, வியப்பாக இருந்தது. அதில் உயரமாக மெல்லியவனாக இருந்தவனைப் பார்க்கிறேன். “அப்பன் இங்கே வா” அவனை அழைத்தேன். “எங்கிருந்து வந்தனீங்கள்” நான் கேட்டுவிட்டு அவனைப் பார்க்கிறேன். “நான் […]

இறப்பினும் மறவோம்; இலக்கினில் தவறோம்!

திரும்பிப் பார்க்கின்றோம்… சுதந்திரத்தின் சிகரத்தை நோக்கிய எங்கள் நெடும் பயணம், கண்ணுக்குள் விரிகிறது அந்த நெடுவழிப்பாதை. எழ எழ விழுந்து, விழ விழ எழுந்து…… எத்தனை இன்னல்கள், எத்தனை சவால்கள், எத்தனை அழுத்தங்கள், எத்தனை எகிறிக் கடந்து எழ எழ விழுந்து…… விழ விழ எழுந்து……… திரும்பிப் பார்க்கின்றோம். இரத்தத்தையும், சாம்பல் மேடுகளையும், சவப்பெட்டிகளையும் தமிழனுக்குத் தந்தவர்களின் தலைவாசல்களுக்கு – கண்ணீரையும், கதறலையும், துன்படுவதென்றால் எப்படி இருக்குமென்பதையும் தமிழன் திரும்பவும் பரிசளித்து…………… திரும்பிப் பார்க்கின்றோம். தேடிப்போய்க் கையேந்தி […]

வெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்….!

அடர்ந்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் கடந்தாக வேண்டும். நினைத்தவுடன் தண்ணீர் குடித்தவன் பசித்தவுடன் வயிறு நிரப்பிக் கொண்டவன். இந்தப் பயணம் முடியுமட்டும் இவை கிடைக்குமா இல்லையா என்றும் தெரியாமல் எப்படித்தான் பயணிப்பது? அவனது கால்கள் இந்தப்பயணத்திற்கு ஒத்துழைக்குமா என்பதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. அவன் எப்படித்தான் அடியெடுத்து வைப்பது? இப்போதுதானே அவன் போராளியாகியிருந்தான். பயிற்சிகளை இனித்தான் பெறவேண்டும். அந்தப் பயிற்சிகளைப் பெறவேண்டுமாயின் இந்தப் பயணம் முடிந்தாக வேண்டும். மணிவண்ணன் […]

“காலவிதை” கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன்

வீட்டிற்குமுன் வாகனம் வந்து நின்ற போது செங்கதிர்வாணன் தான் வருகிறான் என்று நினைத்துக் கொண்டாள் தண்ணீருற்று அம்மா. அவனின் அம்மா திருமலையில் என்பதால் இப்போது உறவுகள் எல்லாம் அந்த வீடுதான். அம்மா தலையை இழுத்து முடித்தபடி விளக்கையும் எடுத்துக்கொண்டு வாசலுக்கு ஓடிவந்தாள். அக்கம் பக்கத்து வீட்டுச்சிறுமிகள் எல்லாம் “குட்டான் மாமா வந்திட்டார்” என்ற மகிழ்ச்சியுடன் பாடப்புத்தகங்களை மூடிவிட்டு ஆரவாரித்து நின்றனர். அவர்களுக்கு ஒருபுறம் அச்சமும் இருந்தது. பாடப்புத்தகத்தில் கேள்வி கேட்பார். தேர்வு அறிக்கை பார்ப்பார். என்றாலும் , […]