தாயக நேரம்:2018-02-20 19:20:59

நினைவு

தேசிய தலைவர் சிந்தனைகள்

வரலாற்றில்

மாமனிதர்

தமிழ் ஊடகத்துறைக்கு ஒரு பேரிழப்பு.!

தமிழ் ஊடகத்துறைக்கு ஒரு பேரிழப்பு ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் இழப்பு – ஈழமுரசு.! குண்டு மழைக்கு மத்தியில் நின்றுகொண்டு உலகிற்கு உண்மைகளை எடுத்துக்கூறிவந்த ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களின் சாவு எங்களுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது என ஈழமுரசு இதழ் வெளியிட்டுள்ள அஞ்சலி அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஈழமுரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, குண்டு மழைக்கு மத்தியில் நின்றுகொண்டு உலகிற்கு உண்மைகளை எடுத்துக்கூறிவந்த ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களின் சாவு எங்களுக்கு பெரும் வேதனையை அளித்துள்ளது. சாவிற்குள் வாழ்ந்துகொண்டு தாயக […]

நாட்டுப்பற்றாளர் பு .சத்தியமூர்த்தி .!

24 ஜனவரி 2009 அன்று சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்திய அவலத்தை செய்தி அறிக்கையாக அறிவிக்கும் நாட்டுப்பற்றாளர் பு .சத்தியமூர்த்தி அவர்கள்.! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி.!

  எதிரியிடம் விலைபோகாத விதைகளையே நாங்கள் விதைக்கின்றோம். ஒரு பெரும் ஊடகச் சமராடியை நாம் இழந்து நிற்கிறோம். எம்மினத்தின் அவலத்தை ‘ஐ.பி.சி. வானொலி’ ஊடக, உலகம் முழுவதும் தெரியப்படுத்திய அந்த அற்புதமான மனிதநேய ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் பிரிவு எமையெல்லாம் துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ‘ஈழமுரசு’ வாரப்பத்திரிகையில் வாராந்த ஆய்வுக் கட்டுரைகளும், ‘தமிழீழத் தேசியத் தொலைக் காட்சி’ யில் தினமும் நடாத்திய நாளிதழ் நேரம் நிகழ்ச்சியும், நிலவரத்தில் கு.வீராவுடன் நிகழ்த்திய கலந்துரையாடல்களும் எமது நினைவை விட்டு நீங்காத விடயங்கள் […]

மாமனிதர் சந்திரநேரு வீரவணக்க நாள்

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு 07.02.2005 அன்று மட்டக்களப்பு இராணுவ கட்டுபாட்டுப் பகுதியான புனானைப் பகுதியில் வைத்து லெப். கேணல் கௌசல்யன் குழுவினர் பயணித்த வாகனத்தின் மீது சிறீலங்கா இராணுவம் மற்றும் தேசவிரோதக் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்து 08.02.2005 அன்று மருத்துவ மனையில் சாவைத் தழுவிய மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு அவர்களின் 13 ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். இவர் சிங்களப் படைகள் […]

திரு அரியநாயகம் சந்திரநேரு

தமிழீழத் தேசியத்  தலைவர் அவர்களால் மாமனிதர்  என்று மதிப்பளிக்கப்பட்ட   மாமனிதர் திரு அரியநாயகம் சந்திரநேரு .!   தலைமை செயலகம்  தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம்  09.02.2005   தமிழ் மக்களின் விடிவையும் தமிழீழ மன்னனின் விடுதலையையும் தனது வாழ்வின் அதியுன்னத  இலட்சியமாக வரித்து அந்த உயரிய இலட்சியத்திற்காக அயராது உன்னத மனிதரை தமிழர் தேசம் இன்று இழந்துவிட்டது தமிழ் மக்களது உரிமைக்காகவும் நீதிக்காகவும் ஓயாது ஒலித்த ஒரு பெரும் குரல் இன்று மிருகத்தனமான தாக்குதலுக்கு ஒரு தமிழினப்  […]

மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு.!

மட்டு – அம்பாறை மண்ணும் மக்களும் மதிக்கின்ற உணர்வுமிக்க உண்மைத்துவமான அரசியல் பண்பாளன். கனிவான சிரிப்பும் ஆறுதலான வார்த்தைகளும் துன்பப்பட்டுவரும் எவரையும் மனம் நோகாமல் துயர் துடைத்து ஆற்றுப்படுத்தி விடும் தூய்மையான மனிதநேயன் சிங்கள அரசின் குடியேற்ற ஆக்கிரமிப்பு எங்கள் வேலிக்கு எல்லையிட்டு எல்லைதேடி வந்தபோதெல்லாம் நீங்களே எங்கள் எல்லைக்கல் உணர்வு மிக்க உங்கள் அரசியல் ஞானம் கண்டு அடக்க நினைத்த சிங்கள அரசு சிறைவாசம் ஆக்கியபோதும் உறுதியுடன் உள்ளிருந்து உரிமைத்துவ உணர்வையே வளர்த்துக்கொண்டீர்கள் தமிழ் தேசிய […]

மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவு வணக்க நாள்.!

மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவு வணக்க நாள் இன்றாகும் சந்திரிக்கா அரசின் ஆட்சிக் காலத்தில் தமிழின அழிப்புக் கொள்கையை அம்பலப்படுத்தி தமிழீழ விடியலிற்கு உறுதுணையாக உழைத்தபோது, சிறிலங்கா தலைநகர் கொழும்பில் வைத்து சந்திரிக்கா அரசின் கொலைக் கரங்களால் 05.01.2000 அன்று சுட்டு படுகொலை செய்யப்பட்ட மனித உரிமையாளரும், சட்டத்தரணியுமான மாமனிதர் திரு. குமார் பொன்னம்பலம் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்.   சிங்களத் தலைநகரில் தனித்து நின்று சிங்களப் பேரினவாதத்திற்கு சவால் விடுத்து. […]

மாமனிதர் குமார் பொன்னம்பலம்.!

சிங்கத்தின்குகையில் அரசோச்சிய புலிக்குரல் ‘இரண்டாயிரமாவது ஆண்டு முடியும் வரை என்னை உயிருடன் விட்டுவைப்பார்களோ தெரியவில்லை’ என்று கூறிய திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் மறைந்து. ஓராண்டாகிவிட்டது. (2001ம் ஆண்டு வரையப்பட்டது) அவரின் நினைவுகளை ஒரு கணம் மீட்டுப் பார்ப்போம். 05.01.2000 அன்று கொழும்புநகரில், அவரது மோட்டார் வண்டிக்குள் வைத்து, கயவன் ஒருவன் தன் கைத்துப்ப்பாக்கியை இயக்கி, ஐந்து குண்டுகளை அனுப்பி குமார் பொன்னம்பலத்தில் உயிரைக் குடித்தான். சிங்களப்பேரினவாதிகளின் தமிழர் விரோதக் கருத்துகளுக்கு சுடச்சுட, ஆணித்தரமணா பதில்களை வழங்கி, […]

குமார் பொன்னம்பலம்.!

அன்புடையீர், தாயக தேசத்தின் விடுதலையை தணியாத இலட்சியமாக வாசித்து அந்த உன்னத இலட்சியத்திற்காக அருப்பணி ஆற்றிவந்த ஒரு அபூர்வமான மனிதரை நாம் இழந்துவிட்டோம். விடுதலைக்காக எரிந்துவந்த ஒரு இலட்சியச் சுடர் அணைந்துவிட்டது. பகைவனின் கோழைத்தனத்திற்கு ஒரு தமிழீழப் பற்றாளர் ஒருவர் பலியாகிவிட்டார். திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் அரசியற் சுயநலங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனித்துவமான மனிதர். ஒரு புரட்சிகரமான அரசியல்வாதி. நேர்மையுடன் நெஞ்சுறுதியுடன் மனித நீதிக்காக குரலெழுப்பிவந்தவர். சிங்களத்தின் தலைநகரில் தனித்துநின்று சிங்களப் பேரினவாததிற்கு சவால்விடுத்து வந்தவர். […]

மாமனிதர் கலைஞர் நாவண்ணன் .!

  போராட்டத்தின் பதிவுகளைத் தனது எழுத்து, பேச்சு, ஒவியம், சிற்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர் கவிஞர் நாவண்ணன். தமிழன் சிந்திய இரத்தம்,கரும்புலி காவியம், இனிமைத் தமிழ் எமது, ஈரமுது உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தைப் பிடித்து கொண்டவர். நாவண்ணனால் தயாரிக்கப்பட்ட “வலியும் பழியும்” என்ற நாடகம் முக்கியமானதாக கருதப்படுகின்றது. புலிகளின் குரலில் தயாரித்த கரும்புலிகள் காவியத்தை நூலாக வெளியிட்ட அதே வேளை பல்வேறு நூல்களையும் வெளியிட்டார். அதே போல் ஓவியம், சிற்பம் ஆகியவற்றை […]